Home
Mobile

ஜெல்லி பீன் வெர்ஷனுடன் துள்ளி வரும் புதிய கார்பன் ஸ்மார்ட்போன்!

By Super

ஜெல்லி பீன் வெர்ஷனுடன் துள்ளி வரும் புதிய கார்பன் ஸ்மார்ட்போன்!
ஸ்மார்ட் ஏ-24 என்ற புதிய கார்பன் ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றி கூற வேண்டிய முக்கிய தொழில் நுட்பமே, இது புதிய ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வதியினை கொண்டதாக இருக்கும்.

ஆன்ட்ராய்டின் புதிய வெர்ஷனான 4.1 ஜெல்லி பீன் இயங்குதளத்தினை கொண்டு சில மின்னணு சாதன பொருட்கள் அறிமுகமாகுகின்றன. இதில் ஜெல்லி பீன் இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதன பட்டியலில் கார்பன் ஸ்மார்ட் ஏ-24 ஸ்மார்ட்போனுக்கும் ஒரு இடம் இருக்கிறது.

ஏ-9, ஏ-7, ஏ-5 என்ற புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது கார்பன் நிறுவனம். இதை தொடர்ந்து சில டேப்லட்களையும் வெளியிட உள்ளது.

கார்பன் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரின் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக இயங்கும். இந்த ஸ்மார்ட்போன் அகன்ற 4.5 அகன்ற திரை வசதியினை வழங்கும். இந்த திரையின் மூலம் 960 X 540 திரை துல்லியத்தை கொடுக்கும்.

இதன் 8 மெகா பிக்ஸல் கேமரா சிறப்பான தொழில் நுட்ப வசதியினையும் கொடுக்கும். இதில் அழகான புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். இது மட்டும் இல்லாமல் வீடியோகாலிங் வசதிக்காக முகப்பு கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தனை தொழில் நுட்ப வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் இந்த ஸ்மார்ட் ஏ-24 ஸ்மார்ட்போன் அடுத்த மாதத்தின் இறுதியில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X