மலிவு விலையில் கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 அறிமுகம்(அம்சங்கள்).!
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
கார்போன் நிறுவனம் 4000எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா அமைப்பு மற்றும் பல்வேறு அம்சங்களுடன் மலிவு விலையில் கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் கருப்பு, சாம்பெய்ன் வண்ணங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின்பு ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஏர்டெல் நிறுவனம் 2000 வரை கேஷ்பேக் சலுகையை வழங்கியுள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

டிஸ்பிளே:
இக்கருவி 5.5-இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1280 x 720 பிக்சல் தீர்மானம் மற்றும்18:9என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு :
கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை சென்சார் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நினைவகம்:
இந்த கார்போன் டைட்டானியம் ஜம்போ 2ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 64ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், ஒடிஜி, யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


4000எம்ஏஎச்:
கார்போன் டைட்டானியம் ஜம்போ 2 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலைப் பொறுத்தவரை ரூ.5,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications