Just In
- 37 min ago
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- 2 hrs ago
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- 3 hrs ago
பட்ஜெட் விலை Poco எக்ஸ்5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி வெளியானது.! ரெடியா இருங்க.!
- 4 hrs ago
பிரபஞ்சத்தின் மறுபக்கத்தில் இருந்து வந்த ரேடியோ சிக்னல்.! திறமையாகக் கண்டுபிடித்த இந்தியர்கள்.!
Don't Miss
- News
நகரும் காற்றழுத்தம்..3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..யாருக்கெல்லாம் குடை அவசியம்
- Movies
பக்கத்து வீட்டு பிரச்சனை.. பாஜகவில் சேரப்போகிறேன்.. அதிரடி முடிவெடுத்த தாடி பாலாஜி மனைவி !
- Finance
கிராமமும், விவசாயமும் ரொம்ப முக்கியம்.. பொருளாதார ஆய்வறிக்கையில் அரசுக்கு முக்கியக் கோரிக்கை..!
- Automobiles
போதும் போதும்னு சொல்ற அளவுக்கு மைலேஜ் தரும்! புதிய காரின் வருகையால் மாருதி ஷோரூம்களுக்கு மக்கள் படையெடுப்பு!
- Sports
அடி தூள்.. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்.. இந்தியாவுக்காக பிசிசிஐ செய்த ஸ்பெஷல் ஏற்பாடு.. வீரர்கள் குஷி!
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
நம்பமுடியாத சூப்பர் பட்ஜெட் விலையில் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7.!
கார்போன் மொபைல்ஸ் நிறுவனமானது, அதன் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிஜமாகவே ஒரு கார்போன் ஸ்மார்ட்போன் தான என்கிற சந்தேகத்தை கிளப்பும் வண்ணத்திலான வடிவமைப்பையும், அம்சங்களையும் கொண்டுள்ள இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது ரூ.6,999/- என்கிற சூப்பர் பட்ஜெட் விலைக்கு வாங்க கிடைக்கும்.

மேலும் நீங்கள் பார்தி ஏர்டெல் சேவையை தேர்ந்தெடுப்பின் இந்த கார்போன் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 மீதான ரூ.2000/- என்கிற கேஷ்பேக் சலுகை வாய்ப்பையும் பெறலாம். வேறு என்னென்ன சலுகை வாய்ப்புகளை இந்த கார்போன் டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 ஸ்மார்ட்போன் வழங்குகிறது.? இக்கருவியின் அம்சங்கள் என்ன.?

மொபிவிக் சூப்பர்கேஷ்
மேலும் இந்த ஸ்மார்ட்போனை, இண்டஸ்இண்ட் அல்லது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. மொபிவிக் (MobiKwik) மூலம் பணம் செலுத்தும் வடிக்கையாளர்களுக்கு ரூ.2,100/- அளவிலான சூப்பர்கேஷ் சலுகையை பெறுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் கேஷ்பேக்
ஏர்டெல் கேஷ்பேக் சலுகையை பொறுத்தமட்டில், வாடிக்கையாளர்கள் ரூ.199/- என்கிற ஏர்டெல் ரீசார்ஜை தொடர்ச்சியான முறையின்கீழ் 36 மாதங்கள் நிகழ்த்த வேண்டும். முதல் 18 மாதங்களுக்குப் பிறகு ரூ.500/- கேஷ்பேக் கிடைக்கும் மீதமுள்ள ரூ.1500/- ஆனது 36 மாத காலம் கழித்து கிடைக்கும்.

5.5 அங்குல முழு எச்டி
அம்சங்களை பொறுத்தமட்டில், இரட்டை சிம் ஆதரவு கொண்ட கார்போன் டைட்டானியம் எஸ்7 ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்குகிறது மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.

கேமரா
இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் உடன் இணைந்து, ஒரு 1.45ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் செயலி கொண்டு இயங்குகிறது. கேமராத்துறையை பொறுத்தமட்டில், எல்இடி பிளாஷ் கொண்ட ஒரு 13 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார் மற்றும் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா ஆகியவற்றை கொண்டுள்ளது.

128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு
எச்டிஆர், ப்ரோ கேப்ட்சர், ஃபேஸ் டிடெக்ஷன் மற்றும் பியூட்டி ஆகிய கேமரா அம்சங்களுடன் பல பில்டர்களையும் கொண்டுள்ளது மற்றும் ஷட்டர் வேகம் மற்றும் ஐஎஸ்ஓ அமைப்புகளை கட்டுப்படுத்தும் விருப்பங்களையும் தன்னுள் கொண்டுள்ளது. மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு வழங்கும், கார்போன் டைட்டானியம் எஸ்7 ஆனது 32 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்புத்திறனை கொண்டுள்ளது.

3000எம்ஏஎச்
இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், டைட்டானியம் ஃப்ரேம்ஸ் எஸ்7 ஆனது 4ஜி வோல்ட், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / எ-ஜிபிஎஸ், ஓடிஜி ஆதரவு கொண்ட மைக்ரோ- யூஎஸ்பி மற்றும் 3.5மிமீ ஹெட்ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஒரு 3000எம்ஏஎச் லி-அயன் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது. நிறுவனத்தின்படி இது சுமார் 120 மணி நேரம் வரையிலான காத்திருப்பு நேரத்தை வழங்க முடியும் அல்லது ஒரு முழுமையான சார்ஜ் ஆனது ஒரு நாள் முழுவதும் நீடிக்கும்.

சென்சார்
பின்புறத்தில் ஒரு கைரேகை சென்சார் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்கின் ஆம்பியண்ட் லைட், கிராவிட்டி, கைரோஸ்கோப் மற்றும் பராக்ஸிமிட்டி ஆகிய சென்சார்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில் 154.3x76.6x8.2 மிமீ உள்ளது.

பெர்சனல் அசிஸ்டென்ட்
தவிர, நிக்கி.ஏஐ (Niki.AI) என்று அழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவிலான பெர்சனல் அசிஸ்டென்ட் ஒன்றையும் இக்கருவி கொண்டுள்ளது. இது வாடிக்கையாளர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சேனல்களின் கீழ் பணம் செலுத்துதல், ரீசார்ஜ் நிகழ்த்துதல், கேளிக்கை, திரைப்பட டிக்கெட், சுகாதாரம் மற்றும் வீடு போன்ற சேவைகளை அணுக உதவுகிறது
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470