Home
Mobile

ஆன்டிராய்டு ஓன் ஓஎஸ் கொண்ட கார்பன் ஸ்பார்க்கிள் 5 பற்றி உங்களுக்கு தெரியுமா

By Meganathan

சில தினங்களுக்கு முன் இந்தியாவில் ஆன்டிராய்டு ஓன் மொபைல்கள் வெளியானது உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். கூகுள் நிறுவனத்தின் மூத்த துணை தலைவரும் தமிழகத்தை சேர்ந்தவருமான சுந்தர் பிச்சை இந்தியாவில் முதல் ஆன்டிராய்டு ஓனஅ ஸ்மார்ட் போன்களை வெளியிட்டார்.

ஆன்டிராய்டு ஓன் ஓஎஸ் கொண்ட கார்பன் ஸ்பார்க்கிள் 5

இந்தியாவில் பிரபலமான மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ் மற்றும் கார்பன் நிறுவனங்கள் முதல் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன்களை வெளியிட்டன. அந்த வகையில் கார்பன் நிறுவனத்தின் முதல் ஆன்டிராய்டு ஓன் ஸ்மார்ட் போன் பற்றி தானஅ இங்கு நீங்கள் பார்க்க போறீங்க

ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

ஆன்டிராய்டு ஓன் ஓஎஸ் கொண்ட கார்பன் ஸ்பார்க்கிள் 5

கார்பன் ஸ்பார்க்கிள் 5 சிறப்பம்சங்கள்

கார்பன் ஸ்பார்க்கிள் 5 முழுமையாக ப்ளாஸ்டிக் மூலம் வடிவமைக்கப்பட்டிருந்தாலும் பார்க்க அந்தளவு மோசமாக இல்லை என்று தான் கூற வேண்டும். பின் பக்க கவரை எளிதாக கழற்ற கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1700 எம்ஓஎஹ் பேட்டரி, டூயல் சிம் மற்றும் மெமர் ஸ்லாட் பின்புறம் வைக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

வலது புறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேல்புறத்தில் 3.5 எம்எம் ஜாக் மற்றும் யுஎஸ்பி போர்ட் இருக்கின்றது. கேமராவை பொருத்த வரை எல்ஈடி ப்ளாஷ் கொண்ட 5 மெகாபிக்சல் ரியர் கேமராவும் 2 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் இதில் உள்ளது.

ஆன்டிராய்டு ஓன் ஓஎஸ் கொண்ட கார்பன் ஸ்பார்க்கிள் 5

4.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட கார்பன் ஸ்பார்க்கிள் 5 புதிய ஆன்டிராய்டு 4.4 கிட்காட் மூலம் இயங்குவதோடு இதில் விரைவில் ஆன்டிராய்டு எல் அப்டேட் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

மேலும் ஸ்பார்க்கிள் 5 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் பிராசஸர் 1 ஜிபி ராம் மற்றும் 4 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்டுள்ளதோடு 3ஜி, வைபை, டூயல் சிம், எப்எம் ரேடியோ, யுஎஸ்பி 2.0, ப்ளூடூத் வசதியும் உள்ளது.

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/a-oX2zUVPS0?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X