Home
Mobile

கலக்கும் கார்பன் மொபைல்கள்....!

By Keerthi

இன்று கார்பன் நிறுவனத்தின், ஏ 15 ப்ளஸ் ஆண்ட்ராய்ட் போன், பட்ஜெட் விலை போனாக, மொபைல் போன் சந்தையில் வலம் வருகிறது.

இதன் அதிக பட்ச விலை ரூ.5,890. சென்ற ஆண்டு வெளியான கார்பன் ஏ15 மொபைல் போனின், மேம்படுத்தப்பட்ட மாடலாக இது வெளிவந்துள்ளது.

இந்த மாடலில், 4 அங்குல டி.எப்.டி.கெபாசிடிவ் டச் ஸ்கிரீன், ஆண்ட்ராய்ட் 4.2 ஜெல்லி பீன் சிஸ்டம், 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, டூயல் சிம் இயக்கம் ஆகிய சிறப்பு அம்சங்கள் உள்ளன.

நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, A2DP இணைந்த புளுடூத்,ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் ராம் நினைவகம் 512 எம்.பி. ஆகவும், ஸ்டோரேஜ் மெமரி 4 ஜிபி ஆகவும் உள்ளது.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

கலக்கும் கார்பன் மொபைல்கள்....!

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜிபி ஆக உயர்த்தலாம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, சரவுண்ட் சவுண்ட் இயக்கம் ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

இந்த மாடல் போனில், பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் பதிந்தே தரப்படுகின்றன.

கிங்ஸாப்ட் ஆபீஸ் (Kingsoft Office), ஹங்கமா மை ப்ளே, கார்பன் லைவ், வாட்ஸ் அப், பிளிப் போர்ட், யு.சி. பிரவுசர், ஆப் பரா மினி ஆகியவை அதில் முக்கியமானவை.

வோடபோன் நிறுவனம் இரண்டு மாதங்களுக்கு 3ஜி டேட்டா 500 எம்.பி. இலவசமாக இறக்கிக்கொள்ள அனுமதி தருகிறது.

இதன் பேட்டரி 1500 mAh திறன் கொண்டதாக உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X