Home
Mobile

வெச்சான் பாரு.. ரூ.10,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. 1TB மெமரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் கார்பன் நிறுவனத்தின் பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போன்களாக கார்பன் ரெபெல் (Karbonn Rebel) மற்றும் கார்பன் ரெபெல் ப்ரோ (Karbonn Rebel Pro) களமிறங்கி இருக்கின்றன. இதில் அறிமுக சலுகையில் ரூ.10,000 பட்ஜெட்டில் கார்பன் ரெபெல் கிடைக்க இருக்கிறது. இந்த கார்பன் ரெபெல் ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

ரூ.15,000 அல்லது ரூ.10,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனாலேயே அதிக மாடல்கள் இந்த பட்ஜெட்டில் வெளியாகி வருகின்றன. இதில் கார்பன் நிறுவனத்தின் ரெபெல் சீரிஸ் மாடல்கள் சேர்ந்துவிட்டன. ரூ.10,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாத பீச்சர்களை கார்பன் ரெபெல் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.

வெச்சான் பாரு.. ரூ.10,999 பட்ஜெட்ல 50MP கேமரா.. 7000mAh பேட்டரி!

கார்பன் ரெபெல் அம்சங்கள் (Karbonn Rebel Specifications): 6.75 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த கார்பன் ரெபெல் ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 650 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாதபடி 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்படுகின்றன. கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ஏஐ (Gemini AI) கொடுக்கப்பட்டு உள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலாக இந்த கார்பன் ரெபெல் கிடைக்க இருக்கிறது.

4ஜி மாடலாக இருப்பதால் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 (Octa Core MediaTek Helio G81) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7000mAh பேட்டரியுடன் இந்த கார்பன் ரெபெல் ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. யூஎஸ்பி-சி சார்ஜிங் (USB-C Charging) சப்போர்ட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவை கொடுத்துள்ளது.

3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) கிடைக்கிறது. ப்ளூ (Blue), கோல்டு (Gold) மற்றும் சில்வர் (Silver) ஆகிய கலர்களில் இந்த கார்பன் ரெபெல் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. 1 டிபிக்கு மைக்ரோஎஸ்டி கார்டு (microSD Card) கொடுக்கிறது. ஆகவே, நானோ சிம் சிலாட் மற்றும் மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் கொடுக்கப்பட்டு உள்ளது.

பேஸ் அன்லாக் (Face Unlock) மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) கொண்ட மாடலாக இந்த கார்பன் ரெபெல் கிடைக்க இருக்கிறது. மேலும், IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0) கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் மார்கெட் விலை ரூ.14,999 ஆக இருக்கிறது.

இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.11,999 விலைக்கு கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.10,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. நவம்பர் 4ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ற பீச்சர்களே கிடைக்கின்றன.

Best Mobiles in India

English summary
Karbonn Rebel With 50MP Camera 7000mAh Launched in India Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X