Home
Mobile

மிரட்டி விட்டாப்ல.. 64MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 20W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 120Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

64 எம்பி கேமரா மட்டுமல்லாமல், 6000mAh பேட்டரி, 20W ஃபாஸ்ட் சார்ஜிங், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் போன்ற பீச்சர்களுடன் பட்ஜெட் விலையில் கார்பன் ரெபெல் ப்ரோ (Karbonn Rebel Pro) வெளியாகி இருக்கிறது. அறிமுக சலுகையில் மேலும் மலிவாக கிடைப்பதால், விற்பனை தேதிக்கு பட்ஜெட் பிரியர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

ஜெமினி ஏஐ பில்ட்-இன் (Gemini AI Built-in) கொண்ட மாடலாக இந்த கார்பன் ரெபெல் ப்ரோ இருக்கிறது. 2 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. மேலும், 2 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் கிடைக்கின்றன. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

மிரட்டி விட்டாப்ல.. 64MP கேமரா.. 6000mAh பேட்டரி.. 20W சார்ஜிங்!

கார்பன் ரெபெல் ப்ரோ அம்சங்கள் (Karbonn Rebel Pro Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கிடைக்கிறது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 720 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 64 எம்பி ஏஐ டூயல் கேமரா (AI Dual Camera) கொடுக்கப்பட்டு உள்ளது.

மெயின் கேமராவில் ஆட்டோ போகஸ் (Auto Focus) மற்றும் ஏஐ சீன் மோட்கள் (AI Scene Modes) கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி81 (Octa Core MediaTek Helio G81) சிப்செட்டுடன் இந்த கார்பன் ரெபெல் ப்ரோ ஸ்மார்ட்போன் கிடைக்க இருக்கிறது. செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 16 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது.

4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்களுடன் இந்த கார்பன் ரெபெல் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளியாகி இருக்கிறது. மேலும், 2 டிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ப்ளூடூத் 5.1 (Bluetooth 5.1) கனெக்டிவிட்டி மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது.

20W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் மற்றும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் கொடுக்கப்பட்டு உள்ளது. IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் ஆரம்ப விலை ரூ.14,999ஆக இருக்கிறது. அறிமுக சலுகையில் ரூ.12,499 விலைக்கு கிடைக்க இருக்கிறது. இந்த விலையிலும் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட இருக்கிறது. ஆகவே, ரூ.11,499 விலைக்கு இந்த கார்பன் ரெபெல் ப்ரோ ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.

வருகிற நவம்பர் 4ஆம் தேதி முதல் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த கார்பன் ரெபெல் ப்ரோ ஸ்மார்ட்போனில் செர்ரி ரெட் (Cherry Red), ப்ளூ (Blue), கோல்டு (Gold) மற்றும் கிரே (Gray) ஆகிய கலர்கள் கிடைக்க இருக்கின்றன. 64 எம்பி கேமரா, 6000mAh பேட்டரி போன்ற பீச்சர்கள் இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கின்றன. ஆகவே, ஆப்ஷனில் எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
Karbonn Rebel Pro With 64MP Camera Launched in India Sale From November 4 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X