Home
Mobile

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. கார்பன் அறிமுகம் செய்யும் புது 5ஜி போன்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?

கார்பன் நிறுவனம் இந்தியாவில் வரும் நவம்பர் 2-ம் தேதி கார்பன் ரீபெல் 5ஜி (Karbonn Rebel 5G) போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளன. இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

கார்பன் ரீபெல் 5ஜி அம்சங்கள் (Karbonn Rebel 5G Specifications): 6.75-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி (HD+ LCD) டிஸ்பிளே வசதியுடன் கார்பன் ரீபெல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 650 நிட்ஸ் பிரைட்னஸ், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் (Refresh Rate)மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கார்பன் அறிமுகம் செய்யும் புது 5ஜி போன்.. 7000mAh பேட்டரி..

தரமான யுனிசாக் பிராசஸர் (Unisoc processor) உடன் புதிய கார்பன் ரீபெல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும். குறிப்பாக இந்த போனில் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் கார்பன் ரீபெல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் வழங்கப்படும். அதேபோல் இந்த போனின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது கார்பன் நிறுவனம்.

இந்த போனின் கேமரா விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனாலும் இந்த போன் 50எம்பி ரியர் கேமரா அமைப்புடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி அல்லது 16எம்பி கேமராவுடன் கார்பன் ரீபெல் 5ஜி போன் அறிமுகமாகும். இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

IP65 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன்கார்பன் ரீபெல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-mounted Fingerprint Scanner) வசதியும் உள்ளது.

7000எம்ஏஎச் உடன் கார்பன் ரீபெல் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் புதிய கார்பன் ரீபெல் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளன. 5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய கார்பன் போனில் உள்ளன. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 3.5 மிமீ ஆடியோ ஜாக் (3.5mm audio jack) போன்ற வசதிகளும் இந்த போனில் உள்ளன.

ப்ளூ (Blue), கோல்டு (Gold), மற்றும் சில்வர் (Silver) ஆகிய கலர்களில் இந்த போன் வாங்க கிடைக்கும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் கார்பன் ரீபெல் ப்ரோ 5ஜி பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த கார்பன் போன்.

Best Mobiles in India

English summary
Karbonn Rebel 5G India launch date leaked online: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X