கார்பன் மற்றும் எம்டிஎஸ் இணைந்து அறிமுகம் செய்யும் மொபைல்கள்!

|

கார்பன் மற்றும் எம்டிஎஸ் இணைந்து அறிமுகம் செய்யும் மொபைல்கள்!
தொலை தொடர்பு நிறுவனமான எம்டிஎஸ் மற்றும் கார்பன் நிறுவனங்கள் இணைந்து புதிய மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. கார்பன் எம்டிஎஸ் பஸ்-எக்ஸ்-121, டர்போ பி-121, ராக்பஸ்டர் வி-121 என்ற இந்த மொபைல்கள் சிறப்பாக சிடிஎம்ஏ தொழில் நுட்பத்தினை வழங்குவதாக இருக்கும்.

பொதுவாக எம்டிஎஸ் தொலை தொடர்பு சேவை நிறுவனத்தின் மொபைல்கள் சிறப்பாக மூவி ப்ளேனட், மை எம்டிஎஸ் ப்ளேனட், எப்எம் ரேடியோ ஆகிய வசதிகளை வழங்கும். மேலும் இதில் டபிள்யூஏபி, கால் & எஸ்எம்எஸ் ப்ளேக்லைட் மற்றும் டேட்டா ப்ரொடெக்ஷன் ஆகிய வசதிகளை எளிதில் பெறலாம்.

எம்டிஎஸ் பஸ்-எக்ஸ்-121 மொபைலில் எளிதாக கியூவர்டி கீப்போர்டு வசதியினையும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதில் 5.1 செ.மீ கொண்ட திரையின் மூலம் சிறப்பான தகவல்களை பெறலாம். அழகான புகைப்படங்களை பெற இதில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா துணை புரியும்.

1,500 எம்ஏஎச் பேட்டரியினை பெற 4 ஜிபி எக்ஸ்பேண்டபில் மெமரி

மற்றும் ஃபேஸ்புக் போன்ரவற்றையும் இதில் பயன்படுத்தலாம். அதோடு இதில் ஃபேஸ்புக் வசதியினை பயன்படுத்த பிரத்தியேக பட்டன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. பஸ் எக்ஸ்-121 மொபைலை ரூ. 2,800 விலையில் பெறலாம்.

எம்டிஎஸ் டர்போ பி-121 மொபைலில் 1.8 இஞ்ச் திரை வசதியினை பெறுலாம். அதோடு இந்த திரை 65 கே கலர்களுக்கும் சப்போர்ட் செய்யும். எப்எம் ரேடியோ, டார்ச் லைட், ஹிந்தி லேன்குவேஜ் சப்போர்ட், ஹிந்தி கீபேட் ஆகிய வசதிகளை பயன்படுத்த முடியும். இதன் 1,800 எம்ஏஎச் பேட்டரி நீடித்து உழைக்கும் ஆற்றலையும் கொடுக்கும்.

சிடிஎம்ஏ வசித கொண்ட இந்த மொபைல் ரூ. 1,999 விலை கொண்டதாக இருக்கும். அடுத்த மொபைலான எம்டிஎஸ் பஸ் எக்ஸ்-121 மொபைல், 2 இஞ்ச் திரையின் மூலம் 240 X 320 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம். இதில் கியூவர்டி கீப்பேட் வசதியினால் சிறப்பாக தகவல்களை டைப் செய்ய முடியும்.

இந்த மொபைலில் 1.3 மெகா பிக்ஸல் கேமரா, எப்எம் ரேடியோ, ஃபேஸ்புக் ஆகிய வசதிகளை எளிதாக பயன்படுத்த முடியும். எக்ஸ்-121 மொபைல் ரூ. 2,800 விலை கொண்டதாக இருக்கும். இந்த செய்தியினை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X