புதிய 3டி இன்டர்பேஸ் வசதியுடன் வரும் கார்பன் மொபைல்

By Super
|
புதிய 3டி இன்டர்பேஸ் வசதியுடன் வரும் கார்பன் மொபைல்
வெற்றி மந்திரத்தை மீண்டும் முழங்க ஆரம்பித்துவிட்டது கார்பன் நிறுவனம். வாடிக்கையாளர்கள் விரும்புவதைக் கொடுக்க முயற்சிப்பதையே வெற்றியின் மந்திரமாகக் கருதும் கார்பன் நிறுவனம் அடுத்ததாக மற்றொரு கே-1818 என்ற டியூவல் சிம் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

3.2 தொடுதிரை வசதி வழங்கப்பட்டுள்ளது. 240 X 400 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்டது. கேமராவை பற்றிய கவலை வேண்டாம். ஏனெனில் இதில் 3.2 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த மொபைலின் மூலம் எப்எம் ரேடியோ வசதியையும் பெறலாம்.

இதில் உள்ள ஆடியோ மற்றும் வீடியோ மல்டி பார்மெட்களுக்கு சப்போர்ட் செய்கிறது. இன்னொரு ஆச்சர்யமும் இதில் காத்திருக்கிறது. கார்பன் கே-1818 போனில் 3டி இன்டர்பேஸ் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் பனோரமா இமேஜ் மோடு பிரீலோடட் செய்யப்பட்டுள்ளது.

இதில் மோடம் சப்போர்டும் உள்ளது. மிகவும் சிறந்த புளூடூத் டிவைஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தகவல்களை உடனுக்குடன் நண்பர்களுக்கு தெரிவித்துக் கொள்ளலாம். கணினியில் உள்ள தகவல்களையும் மொபைலுக்கு மாற்ற யூஎஸ்பி பொருத்தப்பட்டுள்ளது.

இதில் உள்ள டபிள்யூஏபி டேட்டா ஆப்ஷனையும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த மொபைலில் 1,000எம்ஏஎச் ஸ்டான்டர்டு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 8 ஜிபி வரை பைல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. இந்த ஹேண்செட்டின் மூலம் சோஷியல் நெட்வொர்கிங் சைட்களை உபயோகித்துப் பயன்பெற முடியும். கார்பன் கே-1818 மொபைல் ரூ.3,291 என்ற விலையில் இந்திய சந்தையில் கிடைக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X