புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன்

Posted By: Staff

புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன்
கார்பான் நிறுவனம் புதிய டொர்னாடோ என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தவிருக்கிறுது. இதன் சிறப்பு இரண்டு ஜிஎஸ்எம் சிம் பொருத்தும் வசதியாகும். இரட்டை சிம் வசதி இருப்பதால் இந்தியாவில் இதன் வரவேற்பு அதிகமாக இருக்கும். இதன் டிஸ்ப்ளே 3.5 இன்ச் ஆகும்.

மேலும் இது தொடுதிரையுடன் பெரியாதாக உள்ளதால் இதன் செயல்பாடு மிக சிறப்பாக இருக்கும் என நம்பலாம். இதன் டிஸ்ப்ளே டிஎப்டி வசதியுடன் 320X480 ரிசலூசனுடன் உள்ளது. மேலும் இது 262கே டபுள்யுவிஜிஎ வண்ணங்களைத் தருகிறது.

இதன் 3.2 எம்பி கேமரா சிறந்த படங்களையும் வீடியோ காட்சிகளையும் எடுக்கும் சக்தி வாய்ந்தவை. மேலும் இந்த கேமராவில் எடிட்டிங் மற்றும் ஆட்டோபோக்கஸ் வசதியும் உள்ளது. மேலும் இதன் மெமரி சேமிப்பை எடுத்துக் கொண்டால் அது 8ஜிபி வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இதன் மெமரி கார்ட் மைக்ரோ எஸ்டியையும் சப்போர்ட் செய்யும். மேலும் இந்த மொபைல் எல்லாவிதமான ஆடியோ மற்றும் வீடியோ பைல்களை இயக்கக்கூடிய திறன் கொண்டது.

கார்பான் டொரோன்டோவின் அடுத்த சிறப்பு என்னவென்றால் அதன் 3டி யூசர் இன்டர்பேஸ் மற்றும் 3டி க்ராபிக்ஸ் ஆகும். அதனால் இதன் டிஸ்ப்ளே லைவ் மோஷன் வால் பேப்பர்ளை சப்போர்ட் செய்யும்.

தகவல் பரிமாற்றத்திற்கான வசதிகளைப் பார்த்தால் இது எ2டிபி கொண்ட ப்ளூடூத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இதில் யுஎஸ்பி தொடர்பும் உள்ளதால் கணனியோடு ஸின்க்ரோனைசேஷன் செய்ய முடியும். மேலும் சோஷியல் நெட்வொர்க்குகளான பேஸ்புக், ட்விட்டர், எம்எஸ்என் மற்றும் ஸ்கைப் போன்ற வசதிகளும் உள்ளன.

மேலும் இந்த மொபைல் டியுஎன் (யுஎஸ்பி வழியாக டூவல் நெட்வொர்க்கிங்), கே-சோன், ஜி-சென்சார், ஜாவா சப்போர்ட் மற்றும் டபுள்யுஎபி ப்ரவுசர் போன்ற எண்ணற்ற வசதிகள் ஏராளமாக உள்ளன.

மேலும் இந்த போனை தொலைத்துவிட்டால் அதை எளிதாக கண்டுபிடிப்பதற்கான இன்பில்ட் மொபைல் ட்ராக்கர் வசதியும் உள்ளது. கார்போன் டொராண்டோவின் விலை ரூ.4,490 மட்டுமே. உண்மையாகவே இந்த மொபைல் ஒரு மலிவு விலை மட்டுமல்ல மாறாக சிறப்பின் சிறப்பு என்ற அழைக்கலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot