இரட்டை சிம் வசதியுடன் புதிய போன்: கார்பன் அறிமுகப்படு்த்துகிறது

By Super
|

இரட்டை சிம் வசதியுடன் புதிய போன்: கார்பன் அறிமுகப்படு்த்துகிறது

இந்திய மொபைல் நிறுவனமான கோர்பான் டூவல் சிம் மொபைல்களை வழங்குவதில் படுகில்லாடிகள். அந்த வகையில் அவர்கள் 8.9 திரையுடன் 3 மெகா பிக்ஸல் கேமராவுடன் கோர்பான் மல்டிப்ளக்ஸ் என்ற புதிய மொபைலை அறிமுகப்படுத்தவிருக்கிறார்கள்.

இதன் முக்கிய சிறப்பம்சம் இதன் டூவல் சிம் வசதியாகும். முதலில் எல்லா மொபைல் உற்பத்தியாளர்களும் மலிவு விலை மொபைலில் டூவல் சிம் வசதியை வழங்கி வருகின்றனர். ஆனால் கோர்பான் மல்டிப்ளக்ஸ் வந்த பின் எல்லா விலை உயர்ந்த போன்களும் டூவல் சிம் வசதியை வழங்கும் என நம்பலாம்.

கோர்பான் மல்டிப்ளக்ஸின் மற்றொரு அம்சம் என்னவென்றால் அதன் ஹச்விஜிஎ வண்ணத்துடன் கூடிய 8.9 செமீ. டிஸ்ப்ளேயாகும். இந்த டிஸ்ப்ளேயில் வீடியோ படங்களைப் பார்க்கும் போது மிக பரவசமாக இருக்கும். மேலும் தரமான ஒலி அமைப்புடன் ஆடியோ ப்ளேயரும் இந்த மொபைலில் உள்ளது.

இதன் 3 மெகா பிக்ஸல் கேமராவில் தரமான படஙகளையும் வீடியோ ரிக்கார்டிங்குகளையும் நாம் செய்யலாம். இதனால் நமது ஞாபகங்களையும் பதிவு செய்து வைக்க முடியும்.

கோர்பான் மல்டிப்ளக்ஸில் 3டி க்ராபிக்ஸ் மெனு விட்ஜெட்ஸ் மற்றும் இன்பில்ட் டேட்டா/பேக்ஸ மோடம் மற்றும் சிறந்த மின்திறன் ஆகியவை கூடுதல் சிறப்பைத் தருகின்றன. இதன் பேட்டரியைப் பார்த்தால் 1100 எம்எஹச் லை-ஐஒண் பேட்டரியாகும். மேலும் இதில் 16ஜிபி சேமிப்பு வசதியையும் பெற்றுள்ளது. இதன் பேட்டரியின் மூலம் 6 மணி நேரம் தொடர்ந்து பேச முடியும் அதேபோல் இதன் பேட்டரி 240 மணி நேர ஸ்டான்டர்ட் பேக்கப்பையும் பெற்றுள்ளது.

கோர்பான் மல்டிப்ளக்ஸ் ப்ளூடூத் மற்றும் டேட்டா மேனேஜ்மேன்ட்டுக்காக யுஎஸ்பியையும் வழங்குகிறது. மேலும் இது இணையதள வசதிக்காக ஜிபிஆர்எஸ்/டபுள்யுஎபி, இடிஜிஇ போன்ற வசதிகளையும் வழங்கி மகிழ்கிறது.

பொழுதுபோக்கிற்காக எம்பி3, எம்ஐடிஐ, எஎம்ஆர், டபுள்யுஎவி, எஎசி போன்றவற்றை இயக்க மியூசிக் ப்ளேயர் மற்றும் வீடியோ ப்ளேயர்களையும் வழங்குகிறது. அதுபோல் எப்எம் ரேடியோவும் இதில் உண்டு. இதன் விளையாட்டுகள் மற்றும் ரிங்டோன்கள் ஆகியவை முற்றிலும் புதியவை.

கோர்பான் மல்டிப்ளக்ஸ் மொபைலின் விலையைப் பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வரவில்லையென்றாலும் யுஎஸ்பி போர்ட், ஜார்ஜர் மற்றும் ஹெட்செட்டுடன் ரூ.7,500க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X