Home
Mobile

புதிய டியூவல் சிம் போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன்

By Super
புதிய டியூவல் சிம் போனை அறிமுகப்படுத்துகிறது கார்பன்
புதிதாக 4 ஸ்மார்ட்போன்களை ஒரே சமயத்தில் களமிறக்கிய கார்பன் நிறுவனம் கேடபிள்யு என்ற பெயரில் புதிய மொபைலை அறிமுகப்படுத்தியுள்ளது.

அன்றாட வாழ்கையில் மொபைல் ஒவ்வொருவருக்கும் தேவையாக இருக்கிறது. அந்த அத்தியாவசியத் தேவைகளைப் புரிந்து கொண்டு, பல நிறுவனங்கள் தங்களின் புதிய புதிய தொழில் நுட்பங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டே இருக்கின்றனர்.

இந்த புதிய கார்பன் கேடபிள்யு மொபைல் டியூவல் சிம் தொழில் நுட்பத்துடன் வந்து, வாடிக்கையாளர்களை மகிழ்விக்க உள்ளது.

இந்த மொபைல் அனைத்து வகை மக்களாலும் பெரிதும் விரும்பப்படும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இந்த மொபைலைப் பார்த்த பின்பு, வாடிக்கையாளர்களின் பார்வை வேரெங்கும் பதியாது. இதன் வடிவமைப்பு நிச்சயம் பிரம்மிப்பூட்டும் வகையில் இருக்கும்.

வயதுவித்தியாசம் இல்லாமல் அனைத்து வகையினரும் இந்த டியூவல் வசதி கொண்ட மொபைலை விரும்புவர். நோக்கியா, சாம்சங், சோனி எரிக்சன், வெர்ஜின், அல்காடெல், ஹுவெய், பேனாசோனிக் போன்ற வெளி நாட்டு நிறுவனங்களுக்கு மத்தியில் கார்பன் மொபைலும் புதிய தொழில் நுட்பத்தினாலும், அழகான வடிவமைப்பினாலும் தனது முத்திரையை வெகுவாக பதிக்கிறது.

இந்த மொபைல் டைப் செய்வதற்கு எளிதாக இருக்கும் வகையில் கியூவர்டிக் கீப்பேட் வசதியினைக் கொண்டுள்ளது. 2 மெகா பிக்ஸல் கேமரா வசதியினைக் கொண்டுள்ளதால் துல்லியமான புகைப்படத்திற்கும் வீடியோவிற்கும் குறைவே இல்லை.

எப்எம் ரேடியோ, ஆடியோ ப்ளேயர், வீடியோ ப்ளேயர் போன்ற வசதிகளுக்கும் இந்த மொபைல் அருமையாக ஒத்துழைக்கிறது. இதன் மைக்ரோஎம்எஸ்டி கார்டு, 8ஜிபி மெமரிக்கு சப்போர்ட் செய்கிறது. இதில் உள்ள 900 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி மூலம் சிறப்பான டாக் டைம் மறறும் ஸ்மான்-பை டைமும் கொடுக்கிறது.

2.4 கியூவிஜிஏ டிஸ்ப்ளேவையும், 320 X 240 திரை துல்லியத்தையும் கொடுக்கிறது. 100 கிராம் எடை கொண்ட இந்த மொபைலை எளிதாகக் கையாளலாம். 3ஜி, எட்ஜ், வைபை போன்ற தொழில் நுட்பம் இதில் இல்லை. இது ஒரு மல்டி மீடியா ஹேண்ட்செட். இந்த கார்பன் கேடபில்யு மொபைல் ரூ.2,650 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X