Home
Mobile

தொழில் நுட்ப வசதியினை அள்ளி கொடுக்கும் கார்பன்!

By Super

தொழில் நுட்ப வசதியினை அள்ளி கொடுக்கும் கார்பன்!
அனைவரும் வாங்கும் வகையில் புதிய மொபைல்களை கவர்ச்சிகரமான விலையில் வெளியிடும் கார்பன் நிறுவனம் இன்னொரு புதிய மொபைலை வெளியிட்டு உள்ளது. இந்நிறுவனம் கே-டி61 ஐகோனிக் என்ற புதிய மொபைலையும் வெளியிட்டுள்ளது. இந்த மொபைல் சிறப்பான தொழில் நுட்பங்களை வழங்கினாலும் குறைந்த விலை கொண்டது தான்.

அடிப்படை வசதிகளை வழங்கும் இந்த மொபைல் 2.8 இஞ்ச் திரையினை கொண்டது. இதன் 1.3 மெகா பிக்ஸல் கேமிராவின் மூலம் பொழுதுபோக்காக நிறைய புகைப்படத்தினை எடுத்து மகிழலாம். தகவல்களை ஸ்டோர் செய்து கொள்ள உதவும் இதன் மெமரி வசதியினை 8ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். பொழுதுபோக்கு அம்சமாக இதில் மல்டிமீடியா ப்ளேயரும் உள்ளது.

இந்த மொபைல் கண்ணைகளை கவரும் விதமாய் கறுப்பு மற்றும் வெள்ளை என்று இரண்டு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு டியூவல் சிம் நெட்வொர்க் வசதிக்கும் இந்த மொபைல் சப்போர்ட் செய்யும் என்பது உண்மையிலேயே வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிமையான செய்தி. கார்பன் நிறுவனத்தின் இந்த கே-61 ஐகோனிக்மொபைல் ரூ.3,100 விலையில் பெறலாம். வாடிக்கையாளர்கள் கொடுக்கும் பணத்திற்கு இந்த மொபைல் சிறப்பான தொழில் நுட்பத்தினை வழங்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X