Home
Mobile

சிறந்த வசதிகளுடன் வரும் கார்பன் கே-99 தன்டர்பாக்ஸ் மொபைல்!

By Super

சிறந்த வசதிகளுடன் வரும் கார்பன் கே-99 தன்டர்பாக்ஸ் மொபைல்!
எவ்வளவு தொழில் நுட்பங்கள் இருந்தாலும் அதை எல்லா மக்களும் எளிதாக பயன்படுத்தும் விதத்தில் இருக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதற்கு ஏற்ற வகையில் மொபைல்களை வழங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறப்பான இடத்தை பிடித்து உள்ளது கார்பன் நிறுவனம்.

கே-99 தன்டர்பாக்ஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் வெளியிட உள்ளது கார்பன். இது 5.6 செ.மீ திரை வசதியை கொண்டுள்ளது. இந்த மொபைல் 262கே கலர்களுக்கு சப்போர்ட் செய்யும். 176 X 220 பிக்ஸல் திரை துல்லியமும் இந்த மொபைலின் மூலம் கிடைக்கும்.

இதில் வாடிக்கையாளர்களுக்காக இதில் இரண்டு கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதன் 0.3 மெகா பிக்ஸல் கேமரா 649 X 480 பிக்ஸல் துல்லியத்தினை வழங்கும். டிஜிட்டல் சூம் வசதியும் இதில் இருப்பதால், எந்த புகைப்படத்தையும் தெளிவாக பார்க்க உதவும். விஜிஏ கேமரா சவுகரியமும் இதில் உள்ளது.

இந்த மொபைலில் ஒரு முக்கிய வசதி என்னவென்றால் இதை பிசி கம்ப்யூட்டருடன் எளிதாக இணைக்கலாம். இது நிறைய நவீன வசதிகளை கொண்டது. டியூவல் கேமரா மட்டும் அல்ல இதில் டியூவல் சிம் நெட்வொர்க் வசதியும் உள்ளது. இரண்டு நெட்வொர்கை பயன்படுத்த, இரண்டு மொபைல் வாங்க வேண்டிய அவசியத்தையும் இந்த கார்பன் கே-99 தன்டர்பாக்ஸ் மொபைல் குறைக்கிறது.

இந்த மொபைல் ஜிபிஆர்எஸ் வசதிக்கு சப்போர்ட் செய்யும். கார்பன் கே-99 தன்டர்பாக்ஸ் மொபைலின் விலை சீக்கிரத்தில் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படும். இந்த மொபைலை எல்லோரும் சுலபமாக பயன்படுத்த, எளிமையான வடிவமைப்பு கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X