4ஜி வோல்ட் வசதியுடன் வெளிவரும் கார்பன் கே9 ஸ்மார்ட் கிராண்ட்.!
கார்பன் கே9 ஸ்மார்ட் கிராண்ட் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
கார்பன் நிறுவனம் இந்தியாவில் கார்பன் கே9 ஸ்மார்ட் கிராண்ட் என்ற ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்
மற்றும் ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளம் வசதியும் இடம்பெற்றுள்ளது, இந்த ஸ்மார்ட்போனில் கேமராவுக்கு அதிக முக்கியதுவம்
கொடுக்கப்பட்டுள்ளது.
கார்பன் கே9 ஸ்மார்ட் கிராண்ட் விலைப் பொறுத்தவரை ரூ.5,290ஆக உள்ளது, மேலும் பல இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதன்பின் வீடியோகேம் போன்ற அம்சங்களுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

5.2-இன்ச் டிஸ்பிளே:
இக்கருவி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (480-854)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்மாடல்.

ஆண்ட்ராய்டு 7.0:
கார்பன் கே9 ஸ்மார்ட் கிராண்ட் பொறுத்தவரை 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர்செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும்
எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி,ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2300எம்ஏஎச்:
கார்பன் கே9 ஸ்மார்ட் கிராண்ட் பொறுத்தவரை 2300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications