Home
Mobile

ரூ.2,500ல் ஃபிலிப் ஃபார்ம் வடிவமைப்பில் கார்பன் மொபைல்!

By Super

ரூ.2,500ல் ஃபிலிப் ஃபார்ம் வடிவமைப்பில் கார்பன் மொபைல்!
மலிவு விலையிலும், உயர்ந்த தொழில் நுட்பத்திலும் சிறந்த மொபைல்களை கொடுத்து இருக்கும் கார்பன் நிறுவனத்தினை பற்றி அனைத்து வாடிக்கையாளர்களும் அறிந்ததே. எல்கட்ரானிக் சாதன உலகில் இப்பொழுது புதிய வசதிகளுடன் நுழைய இருக்கிறது. கே-44 என்ற குறைந்த விலை கொண்ட மொபைலை வெளியிட இருக்கிறது கார்பன் நிறுவனம்.

இந்த மொபைல் ஃபிலிப் ஃபார்ம் வடிவமைப்பு கொண்டது. அதிகமாக ஸ்லைடர் மொபைல்கள் தான் மார்கெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒப்பிட்டு பார்க்கையில் ஃபிலிப் ஃபார்ம் மொபைல்கள் குறைவு தான். மார்கெட்டில் குறைவு என்பதற்காக இதை வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை என்று கூறி விட முடியாது. அதை மனதில் கொண்டு ஃபிலிப் ஃபார்ம் மொபைல்களை வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க இருக்கிறது கார்பன்.

கியூசிஐஎப் 2 இஞ்ச் திரை வசதி கொண்ட இந்த கே-44 மொபைல் 256கே கலர் சப்போர்ட் கொடுக்கும். இந்த திரையினால் 128 X 160 பிக்ஸல் திரை துல்லியத்தையும் பெற முடியும். இது டியூவல் சிம் நெட்வொர்க் வசதியினை வழங்கும் மொபைல்.

இதில் உள்ள கேமரா 640 X 480 பிக்ஸல் துல்லியத்தினை கொடுக்கும். சிறந்த புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். ஜிபிஆர்எஸ் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைலின் மூலமாக டபிள்யூஏபி பிரவுசரை பயன்படுத்தி கொள்ளலாம்.

இதில் உள்ள 840எம்ஏஎச் பேட்டரியின் மூலம் 3 மணி நேரம் டாக் டைமும், 190 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் கிடைக்கும். இந்த கே-44 கார்பன் மொபைல் ரூ.2,500 விலையில் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X