புதிய டியூவல் சிம் போன்: விரைவி்ல அறிமுகப்படுத்துகிறது கார்பன்

இதன் கேமரா 640.0 X 480.0 பிக்ஸல் ரிசல்யூஷன் கொண்டது. இந்த மொபைலில் சூம் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் 1,800 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி வசதி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 7.5 மணி நேரம் டாக் டைம் கொடுக்கும்.
இதில் சிறந்த தொழில் நுட்பம் உபயோகிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் இந்த மொபைல் வாடிக்கையாளர்களுக்குத் சிறந்த நன்பனாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. கார்பன் கே-409 மாடல் புளூடூத் வசதியையும் கொண்டது. கணினியில் இருந்து தேவையான தகவல்களை யூஎஸ்பி கனெக்டிவிட்டியின் மூலம் மொபைலுக்குப் பரிமாற்றிக் கொள்ள முடியும். இந்த போன் ஜிபிஆர்எஸ் வசதியை கொடுக்கிறது.
இதில் எப்எம் வசதியோடு, ரிக்கார்டிங் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான போர்டு மெமரி வசதியும் கூடுதலாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி வரை இதன் மெமரி வசதி உள்ளது. இதன் மல்டி ஃபார்மெட்ஸ் மீடியாப்ளேயர் மூலம் ஆடியோ மற்றும் வீடியோ வசதியினையும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








