Home
Mobile

பட்ஜெட் விலையில் கார்பன் கே-661 மொபைல்!

By Super

பட்ஜெட் விலையில் கார்பன் கே-661 மொபைல்!
அதிகமான பட்ஜெட் மொபைல்களை கொடுத்து இருக்கிறது கார்பன் நிறுவனம். குறைந்த விலையில் சிறந்த தொழில் நுட்பத்தினை எதிர் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு கார்பன் கே-661 மொபைல் சிறந்ததாக இருக்கும். இந்த மொபைல் 2.4 டிஎப்டி கியூவிஜிஏ தொடுதிரை வசதியை கொண்டது.

இது 240 X 320 மெகா பிக்ஸல் திரை துல்லியத்ததினை வழங்கும். இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்துவதற்கு எளிதாக இதில் டியூவல் சிம் வசதியினை கொண்டுள்ளது. நவீன முறையில் இந்த கே-661 மொபைல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 2 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அழகான புகைப்படத்தை இன்னும் அழகாக கொடுக்க முடியும். சிறந்த வீடியோவினையும் இந்த கேமரா வழங்கும்.

95 கிராம் எடை கொண்ட இந்த கே-661 மொபைல் 1,200 எம்ஏஎச் பேட்டரி வசதியினை கொண்டுள்ளது. இதன் மூலம் 4 மணி நேரம் 5 நிமிடம் டாக் டைம் மற்றும் 140 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் வழங்கும். கூடுதல் ஏ2டிபி புளூடூத் வசதியும் இந்த மொபைலில் கொடுக்ககப்பட்டுள்ளது.

ஜிபிஆர்எஸ் வசதியும் இதில் உள்ளதால் இன்டர்நெட் பயன்பாடுகளை எளிதாக பெறலாம். பட்ஜெட் மொபைல் என்றாலே அதில் பொழுதுபோக்கு அம்சம் வாடிக்கையாளர்களால் அதிகம் எதிர் பார்க்கப்படுகிறது. மியூசிக் ப்ளேயர், எப்எம் ரேடியோ போன்ற வசதிகளும் இந்த மொபைலில் உள்ளது. கார்பன் மொபைலின் தொழில் நுட்பம் பயன்படுத்துவதற்கு எளிய முறையில் இருக்கும். கே-661 மொபைலை ரூ.5,000 விலையில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X