Home
Mobile

கவர்ச்சிகரமான தோற்றத்துடன் புதிய கார்பன் மொபைல்!

By Super

கவர்ச்சிகரமான தோற்றத்துடன் புதிய கார்பன் மொபைல்!
டியூவல் சிம் கார்டு வசதி கொண்ட மொபைல்கள் இன்னும் மக்கள் மத்தியில் மவுசு குறையாமல் தான் வளம் வந்து கொண்டிருக்கின்றன. டியூவல் சிம் வசதி உள்ள மொபைல்கள் என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது கார்பன் நிறுவனம் என்று கூட சொல்லலாம்.

ஏனெனில் இந்நிறுவனம் அதிகமான, அதே சமயம் சிறந்த தொழில் நுட்பம் கொண்ட டியூவல் சிம் மொபைல்களை அடுத்து அடுத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கி கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது புதிதாக கே-600 என்ற மொபைலை வெளியிட்டுள்ளது கார்பன் நிறுவனம். இதுவும் டியூவல் சிம் வசதி படைத்த மொபைல், ஆதலால்

வாடிக்கையாளர்களின் மொத்த விருப்பத்திற்கு பாத்திரமானது என்று சொல்லலாம்.

256 கே கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த மொபைல் 6.6 செ.மீ கியூவிஜிஏ திரை கொண்டது. இதன் 0.3 மெகா பிக்ஸல் கேமராவினால் மனம் விரும்பும் புகைப்படத்தையும், வீடியோ வசதியினையும் பெறலாம். 64 + 32எம்பி போன் மெமரியை இந்த கே-600 கார்பன் மொபைலில் வழங்கப்பட்டுள்ளதால் எதையும் இதில் சேகரித்து

வைத்து கொள்வது எளிதான காரியமாக இருக்கிறது.

எப்எம் ரேடியோ வசதியும் உள்ளது. இந்த மொபைல் முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தில் வடிவமைக்கபட்டது. 1050எம்ஏஎச் பேட்டரி கொண்ட இந்த மொபைல் 4 மணி நேரம் டாக் டைமும், 230 மணி நேரம் ஸ்டான்-பை டைமும் இதில் கிடைக்கும். இன்டகிரேட்டடு பூம் பாக்ஸ் ஸ்பீக்கர் இதில் உள்ளதால் துல்லியமான சத்தத்தை பெறலாம்.

கார்பன் கே-600 மொபைலில் ஜிபிஆர்எஸ், புளூடூத் போன்ற தொழில் நுட்பங்களும் உள்ளது. சவுகரியத்தை வழங்கும் இந்த மொபைலின் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. டியூவல் சிம் வசதி கொண்ட மொபைல் என்பதால் அதற்கு தகுந்த கவர்ச்சிகரமான விலையை இந்த மொபைல் கொண்டிருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X