சியோமி ரெட்மி 4க்கு எதிராக களம் இறங்குகிறது : கார்பன் ஆரா பவர் 4ஜி ப்ளஸ்.!
கார்பன் ஆரா பவர் 4ஜி ப்ளஸ் : ஆண்ட்ராய்டு 7.0.!
இந்திய ஸ்மார்ட்போன் பிராண்டுகளை மெதுவாக சீன வர்த்தகங்களைக் கவனித்து வருகின்றன, பெரும்பாலும் இந்தியாவில் விறக்கப்படும் ஸ்மார்ட்போன் விலை ரூபாய் 5,000 ஆக உள்ளது. கார்பன் மொபைல் வகைகள் எப்போதும் குறைந்தவிலையில் தான் விற்க்கப்படுகிறது.
தற்போது கார்பன் நிறுவனம் ஒரு புது மாடலை அறிமுகப்படுத்துகிறது, அது கார்பன் ஆரா பவர் 4ஜி ப்ளஸ். இது பல்வேறு எதிர்பார்ப்புகளைப் பெற்றுள்ளது, மேலும் சியோமி ரெட்மி 4 விட சிறந்தமாடல் எனக் கூறப்படுகிறது. இதன் கேமரா சியோமியை விட அட்டகாசமாக இருக்கும் தன்மை கொண்டவை, சேமிப்புதிறன்களில் சியோமி ரெட்மி 4 விட கார்பன் ஆரா பவர் 4ஜி ப்ளஸ் தான் சிறந்தமாடல்.

டிஸ்பிளே:
இதன் டிஸ்பிளே பொருத்தமாட்டில் மிக அழகாக இருக்கும், இக்கருவி டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது.

கேமரா:
கார்பன் ஆரா பவர் 4ஜி ப்ளஸ் பொருத்தவரை பின்புற கேமரா 5 மெகா பிக்சல் இடம்பெற்றுள்ளது.மேலும் முன்புற கேமரா 5மெகா பிக்சல் கொண்டுள்ளது. இதனுடன் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உள்ளது.

சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 1 ஜிபி ரேம் கொண்ள்ளது. மற்றும் 16 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளதுஇ 32 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

சாப்ட்வேர்:
குவாட்கோர் 1.5 ஜிஎச்இசெட் சிப்செட் மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மற்றும் மார்ஷ்மெல்லோ ஓஎஸ் மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை, ப்ளுடூத், ஜிபிஎஸ், வோல்ட், 4ஜிஎல்டி, போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி:
இதன் பேட்டரி பொருத்தவரை 4000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் என்று கூறப்பட்டுள்ளது. இன்டர்நெட் பயன்பாட்டிற்க்கு மிக அருமையாக இருக்கும் தன்மைக் கொண்டவை.

விலை:
கார்பன் ஆரா பவர் 4ஜி ப்ளஸ் விலைப் பொருத்தமாட்டில் ரூபாய்.5,790 ஆக உள்ளது. மேலும் சாம்பல் மற்றும் ஷாம்பெயின் வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இது சிறந்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








