என்ட்ரி லெவலில் அசத்தும் ஆரா நோட் 2 4ஜி ஸ்மார்ட்போன் (விலை, அம்சங்கள்).!

Written By:

கார்போன் நிறுவனத்தின் ஆரா நோட் 2 ஸ்மார்ட்போன் ரூ.6,490 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் காபி-சாம்பெயின் மற்றும் பிளாக்-சாம்பெயின் வண்ண விருப்பங்களில் வருகிறது. ஆரா நோட் 2 ஒரு பேஷன் பயன்பாட்டை ஒருங்கிணைக்கிறது, பயனர்கள் இந்த அம்சத்தை கிளிக் செய்வதன் மூலம் அதுவொரு அலங்காரத்தைத் தேட அனுமதிக்கிறது.

என்ட்ரி லெவலில் அசத்தும் ஆரா நோட் 2 4ஜி ஸ்மார்ட்போன் (விலை, அம்சங்கள்)

மேலும், உங்கள் தனித்துவமான வீடியோவை பதிவு செய்ய தேடல் அம்சத்தின் மூலம் உங்களுக்கு பிடித்த பாலிவுட் நட்சத்திர பாணியில் தேடலாம் மற்றும் வாங்கவும் செய்யலாம்.

இந்த "பயன்பாட்டின் செயற்கை நுண்ணறிவு இயந்திரமானது, உங்களுக்கு பொருத்தமான முடிவுகளை / விருப்பங்களை ஒருங்கிணைத்து, அலங்காரத்தின் அச்சு, வடிவம் மற்றும் வண்ணத்தை தானாகவே அங்கீகரிக்கிறது.இது பல்வேறு ஈ-காமர்ஸ் போர்ட்டல்களில் உள்ள விலைகளை ஒப்பிட்டு பயனர்களுக்கு ஏற்ற ஆடைகள் மற்றும் அக்க்சஸெரீஸ்களை தேர்வு செய்ய உதவும்" என்று கார்போன் பத்திரிகை வெளியீடு ஒன்றில் கூறியுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ஆரா நோட் 2 அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி 1280x720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5.5 அங்குல எச்டி டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் 1.25ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்-கோர் செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ரேம்

ரேம்

மேலும் 2ஜிபி ரேம் மற்றும் தொலைபேசியில் 16 ஜிபி உள்ளடக்க சேமிப்புத்திறனுடன் கூடிய விரிவாக்கக்கூடிய சேமிப்பு ஸ்லாட்டில் மைக்ரோ எஸ்டி கார்டைப் பயன்படுத்தி 32ஜிபி அளவு நினைவகத்தை நீங்கள் விரிவுபடுத்தலாம்.

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் கார்பன் ஆரா நோட் 2 ஆனது எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் ஆட்டோபோகஸ் கேமரா மற்றும் பின்புறத்தில் 5 மெகாபிக்சல் நிலையான-போகஸ் கொண்ட செல்பீ கேமரா கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

இது 2900 எம்ஏஎச் லி-அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இது 8 மணி நேர பேச்சு நேரம் மற்றும் 192 மணி நேர காத்திருப்பு நேரத்தை வழங்குவதாக நிறுவனம் கூறுகிறது.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

மேலும், இந்த ஸ்மார்ட்போன் இரட்டை சிம், 4ஜி, ப்ளூடூத், வைஃபை, வைஃபை ஹாட்ஸ்பாட், ஜிபிஎஸ், மைக்ரோ- யூஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளை வழங்குகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் விஆர் கிளாசஸுடன் இணக்கமாக உள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Karbonn Aura Note 2 with Android Nougat launched at Rs 6,490. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot