கார்பன் மற்றும் மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!
புதிதாக அறிமுகமான இரண்டு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய தொழில் நுட்ப விவரத்தினை இங்கே கொஞ்சம் விரிவாக காணலாம். கார்பன் ஏ-7+ மற்றும் மைக்ரோமேக்ஸ் ஏ-87 சூப்பர்ஃபோன் நிஞ்சா-4 ஸ்மார்போன்களின் தொழில் நுட்பம் பற்றி கொஞ்சம் அலசி ஆராயலாம்.
இந்திய நிறுவனமான கார்பன், ஏ-7+ என்ற ஸ்மார்ட்போனை மின்னணு சாதன உலகிற்கு படைத்தளித்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரையினை கொண்டு, தெள்ளத் தெளிவான காட்சிகளை வழங்கும். இதில் எச்விஜிஏ டிஸ்ப்ளே கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பும் கவர்ச்சிகரமானதாக இருக்கும். மைக்ரோமேக்ஸ் ஏ-87 நிஞ்சா ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரையினை கொண்டதாக இருக்கும். இதில் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரையும் மற்றும் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும். இதனால் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இருக்கும் நவீன வசதிகளை எளிதாக பயன்படுத்தலாம். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் டியூவல் சிம் வசதி கொண்டதாக இருக்கும்.
ஏ-7+ ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் லெட் ஃபிலாஷ் வசதியினை உபயோகிக்க முடியும். விஜிஏ முகப்பு கோமராவின் மூலம் வீடியோ காலிங் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும்.
ஏ-87 நிஞ்சா ஸ்மார்ட்போன் 2 மெகா பிக்ஸல் கேமராவினையும், முகப்பு கேமராவினை கொண்டாதாக இருக்கும். இதனால் டியூவல் கேமரா வசதியினை இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பெறலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் 32 ஜிபி வரை கூடுதல் மெமரி வசதியினை வழங்கும் திறன் கொண்டது. ப்ளூடூத், யூஎஸ்பி 2.0, 3ஜி என்று சகிதமும் இந்த ஸ்மார்ட்போன்களில் பெறலாம்.
ஏ-7+ ஸ்மார்ட்போன், ஏ-87 ஸ்மார்ட்போனை காட்டிலும் சற்று அதிக பேட்டரி ஆற்றலை வழங்கும். ஏ-7+ ஸ்மார்ட்போனில் 1,420 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியையும், ஏ-87 சூப்பர்ஃபோன் நிஞ்சா-4 ஸ்மார்ட்போனில் 1,400 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியையும் பெறலாம்.
இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே குறைந்த விலை கொண்டதாக இருக்கும். ஏ-7+ ஸ்மார்ட்போன் ரூ. 6,990 விலையிலும், ஏ-87 சூப்பர்ஃபோன் நிஞ்சா-4 ஸ்மார்ட்போன் ரூ. 5,999 விலையிலும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications