கைக்கு எட்டும் விலையில் கார்பன் ஸ்மார்ட்போன்!

By Karthikeyan
|
கைக்கு எட்டும் விலையில் கார்பன் ஸ்மார்ட்போன்!

மலிவு விலை மொபைல்களைப் பற்றி மக்கள் மத்தியில் ஒரு பெரிய சந்தேகம் நிலவி வந்தது. அதாவது மலிவு விலையில் வரும் மொபைல்போன்கள் தரமாக இருக்குமா என்று பல நினைத்து வந்தனர். ஆனால் மலிவு விலை மொபைல்கள் மிகத் தரமாகவே வருகின்றன என்பதே உண்மை.

அந்த வகையில் கார்போன் நிறுவனம் கார்போன் ஏ7 என்ற ஒரு ஸ்மார்ட்போனை ரூ.7,490க்கு தந்த நிறத்தில் களமிறக்கியது. மலிவு விலையாக இருந்தாலும் இந்த போன் இந்திய மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது. ஏனெனில் இந்த போன் எக்கச்சக்க தொழில் நுட்பங்கள் மற்றும் ஏராளமான அப்ளிகேசன்கள் போன்ற வசதிகளுடன் வந்திருக்கிறது.

இந்த போன் 2 சிம் வசதி கொண்ட ஒரு ஆன்ட்ராய்டு போன் ஆகும். இதன் முதல் சிம் 3ஜி சப்போர்ட்டையும் அதே நேரத்தில் இதன் 2வது சிம் 2ஜி சப்போர்ட்டையும் வழங்குகிறது. இதன் 8.9 செமீ. கப்பாசிட்டிவ் தொடுதிரை மிகத் துல்லியமாக இருக்கிறது.

ஆன்ட்ராய்டு 2.3 இயங்கு தளத்தில் இயங்கும் இந்த போன் 800 மெகா ஹெர்ட்ஸ் ப்ராசஸர் கொண்டு இருப்பதால் இது பல வேலைகளைச் செய்யும் வசதி கொண்டது. இதன் 512எம்பி மெமரியை 32ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

கேமராவைப் பொருத்தவரை இந்த போன் டூவல் எல்இடி ப்ளாஷ் கொண்ட 5எம்பி பின்பக்கக் கேமராவைக் கொண்டுள்ளது. அதனால் சூப்பரான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இந்த கேமரா மூலம் எடுக்க முடியும். இதன் முகப்புக் கேமரா மூலம் வீடியோ உரையாடலையும் நடத்த முடியும்.

இந்த போனில் ஸ்பீக்கர் இருப்பதால் சூப்பராக பாடல்களைக் கேட்க முடியும். அதோடு இந்த போன் வைபை, ப்ளூடூத் மற்றும் எப்எம் ரேடியோ ஆகிய வசதிகளையும் வழங்குகிறது. மொத்தத்தில் இந்த போன் மலிவு விலையில் வந்தாலும் இந்திய மக்களை வெகுவாகக் கவர்ந்திருக்கிறது என்று சொல்லலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X