4ஜி வோல்ட் வசதியுடன் வெளிவரும் கார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன்.!
கார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
கார்பன் நிறுவனம் தற்போது ரூ.4,099 விலையில் கார்பன் ஏ41 ஸ்மார்ட்போனை வெளியிடுகிறது, இவற்றில் 4ஜி வோல்ட் வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது, மேலும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவருகிறது.
கார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் பொருத்தவரை ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இயங்குகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.

4-இன்ச் டிஸ்பிளே:
கார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் 4-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, மேலும் (480-800)பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது.

ஆண்ட்ராய்டு 7.0:
இந்த ஸ்மார்ட்போன் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் செயலியை கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

8ஜிபி மெமரி:
கார்பன் ஏ41 பவர் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது,அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகள்:
4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, வைபை, ப்ளூடூத்போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

2300எம்ஏஎச்:
கார்பன் ஏ41 பவர் பொறுத்தவரை 2300எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி ஒன்று இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது எனகார்பன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை:
கார்பன் ஏ41 பவர் விலை ரூ.4,099ஆக உள்ளது, அதன்பின் இந்த ஸ்மார்ட்போனின் எடை130 கிராம் எனக்கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications