Home
Mobile

கார்போன் களமிறக்கும் இரண்டு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

By Karthikeyan
கார்போன் களமிறக்கும் இரண்டு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்

இந்தியாவைச் சேர்ந்த மொபைல் நிறுவனமான கார்போன், இந்திய மொபைல் சந்தையில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மலிவு விலையில் புதிய புதிய மொபைல் மற்றும் டேப்லெட்டுகளைக் சீரான இடைவெளியில் இந்திய மொபைல் சந்தையில் களமிறக்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் தற்போது இரண்டு ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை கார்போன் புதிதாக தற்போது களமிறக்கி இருக்கிறது. இந்த போன்களுக்கு எ21 மற்றும் எ9+ ஆகிய பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.

இந்த இரண்டு போன்களும் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குகின்றன. மேலும் இந்த போன்கள் மலிவு விலையில் வருகின்றன. அதாவது எ21 போன் ரூ.11,990க்கும், எ9+ போன் ரூ.9,990க்கும் விற்கப்படுகின்றன.

மேலும் இரண்டு போன்களுமே 1.2 ஜிஹெர்ட்ஸ் குவல்காம் சினாப்ட்ராகன் ப்ராசஸர்கள் மற்றும் டூவல் சிம் வசதிகளுடன் வருவதால் இந்த போன்கள் மிகவும் வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.

எ21 போன் க்யுஎச்டி ரிசலூசனுடன் கூடிய 4.5 இன்ச் அளவில் ஒரு டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் எ9+ போன் டபுள்யுவிஜிஎ ரிசலூசனுடன் கூடிய 4 இன்ச் அளவில் டிஸ்ப்ளையை வழங்குகிறது.

இந்த இரண்டு போன்களும் பின்புறம் 5எம்பி கேமராக்களையும், 1.3 எம்பி முகப்புக் கேமராக்களையும் கொண்டிருக்கின்றன. மேலும் 3ஜி சப்போர்ட், 512எம்பி ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்ட் சப்போர்ட் ஆகியவற்றை இந்த இரண்டு போன்களும் கொண்டிருக்கின்றன. இந்த இரண்டு போன்களும் கார்போன் நிறுவனத்திற்கு நல்ல வருமானத்தை ஈட்டித் தரும் என்று நம்பலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X