கார்பன், லாவா டச் ஸ்கிரீன் மொபைல்கள் ஒப்பீடு!

கார்பன் ஏ-1 மற்றும் லாவா எஸ்-12 என்ற இந்த இரண்டு மொபைல்களுமே, வாடிக்கையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் ஆன்ட்ராய்டு 2.2 ஃபிரையோ ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதனால் உயர்ந்த தொழில் நுட்பத்தினை பெற முடியும்.
கார்பன் ஏ-1 மொபைல் 105 கிராம் எடை கொண்டது. லாவா எஸ்-12 மொபைலோ, கார்பன் ஏ-1ஐ விட சற்று அதிகமாக 120 கிராம் எடையை கொண்டது. திரை வசதியிலும் லாவா மொபைல், கார்பனை மிஞ்சுவதாக தெரிகிறது. ஏனென்றால் லாவா மொபைலில் 3.2 இஞ்ச் திரை கொடுக்கப்பட்டுள்ளது.
கார்பன் மொபைல் 2.9 இஞ்ச் திரை கொண்டதாகவும், 3.2 மெகா பிக்ஸல் கேமரா கொண்டதாகவும் இருக்கிறது. லாவா எஸ்-12 மொபைல் ஆற்றல் வாய்ந்த 5 மெகா பிக்ஸல் கேமராவை வழங்கும். இதனால் புகைப்படங்கள், வீடியோக்கள் சிறந்த முறையில் எடுக்கலாம்.
கார்பன் ஏ-1 மொபைலில் 1,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினால் 250 நிமிடங்கள் டாக் டைம் மற்றும் 250 மணி நேரம் ஸ்டான்-பை டைம் கொடுக்கும். லாவா எஸ்-12 மொபைல் 1,300 எம்ஏஎச் பேட்டரியினால், 485 நிமிடங்கள் டாக் டைம், அதோடு 590 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும் கொடுக்கும்.
ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர், எப்எம் ரேடியோ, எஸ்எம்எஸ், இ-மெயில் போன்ற சகல சவுகரியங்களையும் கொடுக்கும். கார்பன் ஏ-1 மொபைல் ரூ.7,000ஐ ஒட்டிய விலையிலும், லாவா எஸ்-12 மொபைல் ரூ.10,000 ஒட்டிய விலையிலும் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications