Home
Mobile

சீனாவில் அறிமுகமாகும் புதிய கே-டச் ஸ்மார்ட்போன்!

By Super

சீனாவில் அறிமுகமாகும் புதிய கே-டச் ஸ்மார்ட்போன்!
தனது முதல் டிடிஎம்ஏ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தி உள்ளது கே-டச் நிறுவனம். இந்திய மார்கெட்டில் மட்டும் இல்லாமல், மற்ற மொபைல் மார்கெட்டிலும் என்ன மொபைல்கள் வெளியாகிறது என்றும் தெரிந்து கொள்ளலாம்.

கே-டச் டி-660 ஸ்மார்ட்போன் ஐபிஎஸ் திரை தொழில் நுட்பத்தினை கொடுக்கும். இதன் திரை தொழில் நுட்பம் மட்டும் அல்லாமல் 4 இஞ்ச் அகன்ற திரையினையும் வழங்கும். 5 மெகா பிக்ஸல் கேமராவில் எத்தனை புகைப்படங்கள் எடுக்க வேண்டுமோ அது வாடிக்கையாளர்கள் விருப்பம் என்று தான் சொல்ல வேண்டும்.

1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் மார்வல் பிஎக்ஸ்ஏ920எச் பிராசஸரின் மூலம் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் இயங்குதளத்தினை சிறப்பாக இயங்க வைக்கும். இந்த சூப்பர் ஸ்மார்ட்போனை டிவியுடன் எளிதாக இணைக்கும் தொழில் நுட்ப வசதிகளையும் வழங்கும்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்ப வசதிகள் மட்டும் அல்லாமல், வைபை தொழில் நுட்பத்தினையும் பெறலாம். 3ஜி நெட்வொர்க் வசதியினையும் இந்த ஸ்மார்ட்போனில் பயன்படுத்தலாம்.

வாடிக்கையாளர்களுக்கு தேவையான தொழில் நுட்ப வசதிகளை இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பாக பெறலாம். விலையும் கவர்ச்சிகரமானதாக இருக்கும் என்று கூறலாம்.

இந்த கே-டச் டி-660 ஸ்மார்ட்போன் ரூ.8,000 விலையில் கிடைக்கும். சீனா போன்ற மொபைல் மார்கெட்களில் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வரவேற்பினை பெற்றுவிட்டால் பின்பு இந்தியாவிலும் இந்த ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X