Home
Mobile

வெறும் ரூ.6299 க்கு.. இப்படி ஒரு Phone வர்றதுலாம் அபூர்வம்.. 5000mAh பேட்டரி, 12GB ரேம், Dynamic Bar டிஸ்பிளே!

சூப்பர்-பட்ஜெட் பிரிவின்கீழ் இப்படி ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகமாவதெல்லாம் அபூர்வம் என்றுதான் கூற வேண்டும். வெறும் ரூ.6299-க்கு 5000mAh பேட்டரி, 12ஜிபி வரையிலான ரேம், ஐபோன்களில் காணப்படுவது போன்ற டைனமிக் பார் டிஸ்பிளே போன்ற முக்கிய அம்சங்களை வேறு எந்த போனும் வழங்காது!

நாம் இங்கே பேசுவது ஐடெல் ஏ70 (Itel A70) ஸ்மார்ட்போனை பற்றித்தான். கடந்த ஜனவரி 3 ஆம் தேதியன்று, இந்தியாவில் அறிமுகமான இந்த பட்ஜெட்-விலை ஸ்மார்ட்போனின் விற்பனை ஜனவரி 5 ஆம் தேதி தொடங்குகிறது. ஐடெல் ஏ70 மொத்தம் 3 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது.

Itel A70 விற்பனை ஆரம்பம்: விலை மற்றும் அம்சங்கள்!

பேஸிக் 4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.6,299 க்கும் , 4ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.6.799 க்கும் மற்றும் ஹை-எண்ட் வேரியண்ட் ஆன 4ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.7,299 க்கும் வாங்க கிடைக்கிறது.

அசூர் ப்ளூ (Azure Blue), பிரில்லியண்ட் கோல்ட் (Brilliant Gold), ஃபீல்ட் க்ரீன் (Field Green) மற்றும் ஸ்டைலிஷ் பிளாக் (Stylish Black) என் மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் விற்பனைக்கு வந்துள்ள ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போனானது பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியா (Amazon India) மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆஃப்லைன் ஸ்டோர்களின் (Offline Stores) வழியாக வாங்க கிடைக்கிறது.

Itel A70 விற்பனை ஆரம்பம்: விலை மற்றும் அம்சங்கள்!

ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 1612 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (Up to 120Hz Refresh Rate) மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (Peak Brightness) உடனான 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன், ஆப்பிள் ஐபோன்களில் காணப்படும் டைனமிக் ஐலண்ட் (Dynamic Island) அம்சத்தை போன்ற டைனமிக் பார் (Dynamic Bar) அம்சத்துடன் வருகிறது. ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, இது பேஸிக் ஆன நோட்டிஃபிகேஷன் மற்றும் அலெர்ட்களை வழங்கும் ஸ்மார்ட் அசிஸ்டென்ட் (Smart Assistant) ஆகும்.

Itel A70 விற்பனை ஆரம்பம்: விலை மற்றும் அம்சங்கள்!

ஆக்டா-கோட் யுனிசாக் டி603 (Octa-core Unisoc T603) சிப்செட் மூலம் இயக்கப்படும் ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி வரையிலான ரேம் (4GB RAM) உடன் இணைக்கப்பட்டுள்ளது. மெமரி ஃபியூஷன் டெக்னாலஜியின் (Memory Fusion Technology) கீழ் இந்த ஸ்மார்ட்போனின் ஒட்டுமொத்த ரேம்-ஐ 12ஜிபி வரை நீட்டிக்க முடியும். மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு (MicroSD Card) வழியாக ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜை 2டிபி வரை விரிவாக்க முடியும்.

ஆண்ட்ராய்டு 13 கோ (Android 13 Go) வெர்ஷன் அடிப்படையிலான ஐடெல்ஓஎஸ் 13 (ItelOS 13) உடன் அனுப்பப்படும் இந்த ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Steup) உள்ளது. அதில் 13 மெகாபிக்சல் மெயின் கேமரா + இரண்டாம் நிலை ஏஐ கேமரா (AI-backed Secondary Sensor) உள்ளது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

5000mAh பேட்டரியை கொண்டுள்ள ஐடெல் ஏ70 ஸ்மார்ட்போன் 8.6மிமீ தடிமன் அளவிலான ஸ்லிம் பாடி டிஸைனை பெற்றுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 4ஜி, வைஃபை 802.11, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் . க்ளோனாஸ் (GPS / GLONASS) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவைகளை கொண்டுள்ளது. கடைசியாக இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் (Fingerprint Sensor) உடன் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Just Rs 6299 5000mAh Battery 12GB RAM Dynamic Bar Display Itel A70 Sale Starting From Today Jan 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X