தாமதம் தான் ரத்து இல்ல.. மொத்த நிறுவனத்தையும் கதிகலங்க வைத்த iQoo! இந்தியாவுக்கு வருது.!

|

Vivo இன் துணை பிராண்ட் ஆன iQOO டிசம்பர் 8 அன்று iQOO 11 தொடரை அறிமுகப்படுத்தியது. இந்த தொடரில் இரண்டு ப்ரீமியம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றுள்ளன. அது iQOO 11 மற்றும் iQOO 11 Pro ஆகும். இந்த சீரிஸ் இன் இந்திய வருகையை நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது.

தாமதம் தான் ரத்து இல்ல.. மொத்த நிறுவனத்தையும் கதிகலங்க வைத்த iQoo!

இந்தியாவில் ஐக்யூ 11 ஜனவரியில் தொடங்கப்படும் போது இதில் ஒரேஒரு மாறுபாடு தான் இடம்பெறும் என நிறுவனம் குறிப்பிட்டது. அதாவது இந்த சீரிஸ் இல் ஜனவரி மாதம் ஐக்யூ 11 மட்டும் தான் அறிமுகம் செய்யப்படும் எனவும் அப்போது ஐக்யூ 11 ப்ரோ வெளியிடப்படாது எனவும் குறிப்பிடப்பட்டது. இந்த நிலையில் இதன் ப்ரோ மாடல் வெளியிட தாமதம் மட்டும் தான் ரத்து இல்லை என நிறுவனம் தரப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

iQOO 11 அறிமுக விவரம்

iQOO 11 மற்றும் iQOO 11 ப்ரோ ஆகியவை டிசம்பர் 8 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விவோவின் துணை பிராண்டான ஐக்யூவின் இந்த ஸ்மார்ட்போன் ப்ரீமியம் மற்றும் முதன்மையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஆகும். பல்வேறு ஆய்வுத் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் நல்ல மதிப்பெண்ணை பெற்றிருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. சீனாவில் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஐக்யூ 11 சீரிஸ் இல் உள்ள ஐக்யூ 11 மாடல் மட்டும் தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் குறிப்பிட்டிருந்த நிலையில் iQOO இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி நிபுன் மரியா, நிறுவனம் ஐக்யூ 11 ப்ரோ மாடலை முழுவதுமாக கைவிடவில்லை என சுட்டிக்காட்டினார். விரைவில் இந்த ப்ரோ மாடல் போன் இந்தியாவுக்கு வரலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இந்த தகவலில் அதிகாரப்பூர்வ தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

iQOO 11 ஆனது ஜனவரி 10 2023 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்தியாவிற்கு ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வரும் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பதும் கவனிக்கத்தக்க ஒன்று. சியோமி 13 சீரிஸ் இல் கூட இதே குவால்காம் சிப்செட் தான் இடம்பெற்றுள்ளது.

iQoo 11, iQoo 11 Pro அம்சங்கள்

iQoo 11 மற்றும் iQoo 11 Pro அம்சங்கள் குறித்து பார்க்கலாம். iQoo 11 ஆனது 6.78 இன்ச் QHD+ AMOLED LTPO 4.0 டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷிங் ரேட் ஆதரவுடன் 2கே தெளிவுத்திறன், 3200 x 1440 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் HDR10+ ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த டிஸ்ப்ளே. பாதுகாப்பு அம்சத்துக்கு என இந்த ஸ்மார்ட்போனில் ஃபிங்கர் பிரிண்ட் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது.

தாமதம் தான் ரத்து இல்ல.. மொத்த நிறுவனத்தையும் கதிகலங்க வைத்த iQoo!

iQOO 11 ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

ஐக்யூ 11 ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு இருக்கிறது. 50 எம்பி சாம்சங் ISOCELL சென்சார், 13 எம்பி போர்ட்ரெய்ட் கேமரா மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைட் சென்சார் மூன்று கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என 16 எம்பி கேமரா ஆதரவு இருக்கிறது.

இந்த iQoo ஸ்மார்ட்போனில் 5,000mAh பேட்டரி உள்ளது. அதேபோல் இதை சார்ஜ் செய்வதற்கு 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ஆர்ஜின் ஓஎஸ் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

ஐக்யூ 11 ப்ரோ ஸ்மார்ட்போனானது ஐக்யூ 11 போன்றே பல அம்சங்களைக் கொண்டிருக்கிறது. ஆனால் ப்ரோ மாடலில் 200 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங், 50 வாட்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 10 வாட்ஸ் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு வழங்கப்பட்டிருக்கிறது. நீங்கள் புதிய ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் யோசிக்காமல் ஐக்யூ 11 சீரிஸ் மாடல்களை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Just Delay, Not Cancel: iQoo Officially Confirms about iQoo 11 india Launching and one More thing

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X