4 மாசம் ஆகல.. அதுக்குள்ள ரூ.3000 விலை குறைப்பு.. யாரு விடுவா இப்படி ஒரு Samsung Phone-ஐ.. ஆர்டர் தெறிக்குது!
4 மாதங்களுக்கு முன்னர்.. அதாவது கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகமான சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்றின் மீது முழுதாக ரூ.3000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதென்ன மாடல்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? ரூ.3000 விலைக்குறைப்பை பெற்றுள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி (Samsung Galaxy A25 5G) ஸ்மார்ட்போன் தான். இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என 2 ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கிறது. சுவாரசியமாக இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ரூ.3,000 விலைக்குறைப்பை பெற்றுள்ளன.

பழைய விலை VS புதிய விலை: கடந்த டிசம்பரில் அறிமுகமான போது சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.26,999 க்கும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.29,999 க்கும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
தற்போது இவ்விரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ரூ.3000 விலைக்குறைப்பை பெற்று, 128ஜிபி ஆப்ஷன் ஆனது ரூ.23,999 க்கும் மற்றும் 256ஜிபி ஆப்ஷன் ரூ.26,999 க்கும் வாங்க கிடைக்கிறது. இந்த புதிய விலை நிர்ணயம் சாம்சங் இந்தியா வலைத்தளத்திலும் பிரதிபலிக்கிறது மற்றும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ, யெல்லோ மற்றும் ப்ளூ பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி-ன் முக்கிய அம்சங்கள்: இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.5-இன்ச் FHD+ சூப்பர் AMOLED டிஸ்பிளே, 8ஜிபி வரையிலான ரேம், ஆக்டா-கோர் எக்ஸினோஸ் 1280 சிப்செட், 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி + 8எம்பி + 2எம்பி ரியர் கேமரா, 13எம்பி செல்பீ கேமரா, 25W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி ஏ25 5ஜி உடன் சேர்த்து சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி (Samsung Galaxy A15 5G) மாடலும் இந்தியாவில் அறிமுகமானது. ஆனால் அதன்மீது எந்த விலைகுறைப்பும் அறிவிக்கப்படவில்லை. அது இன்னமும் அதே அறிமுக விலையின் கீழ் தான் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி-யின் விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனும் கூட 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.19,499 க்கும், ஹை-எண்ட் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் ரூ.22,499 க்கும் வாங்க கிடைக்கிறது. இது ப்ளூ, லைட் ப்ளூ மற்றும் ப்ளூ பிளாக் என்கிற 3 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ15 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6100+ சிப்செட், அதிகபட்சம் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ், 90ஹெர்ட்ஸ் 6.5 இன்ச் FHD+ டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், 50எம்பி ட்ரிபிள் கேமரா செட்டப், 13எம்பி செல்பீ கேமரா, 25W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி போன்ற அம்சங்களை கொண்டுள்ளது.
அடுத்தடுத்து என்னென்ன சாம்சங் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன? ஜூலை 10 ஆம் தேதி நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு ஈவென்ட் 2024 (Samsung Galaxy Unpacked Event 2024) நிகழ்வில் கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 (Galaxy Z Fold 6), கேலக்ஸி இசட் ஃபோல்ட் 6 அல்ட்ரா (Galaxy Z Fold 6 Ultra) மற்றும் கேலக்ஸி இசட் ஃபிளிப் 6 (Samsung Galaxy Z Flip 6) மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம்.


Click it and Unblock the Notifications








