ஒவ்வொன்றும் ஒரு ரகம்.. ஜூன் 2024-ல் இந்தியாவில் அறிமுகமாகும் 6 அடேங்கப்பா ஸ்மார்ட்போன்கள்!
பல நிறுவனங்களின்.. பல எண்ணிக்கையிலான புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்தோடு 2024 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களை கடந்துவிட்டோம். தற்போது நாம் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் காலடி எடுத்து வைத்து உள்ளோம். கடந்த 6 மாதங்களில் பல பெஸ்ட்-இன்-கிளாஸ் அம்சங்களுடன் (Best-in-class features) பல தரமான ஸ்மார்ட்போன்கள் அறிமுகமானதையும் கண்டோம்; அதேசமயம் பெரிய எதிர்பார்ப்புகளை கிளப்பி "மொக்கை" வாங்கிய சில ஸ்மார்ட்போன்களையும் கண்டோம். அப்படியாக இந்த ஜூன் மாதமும்.. அடுத்துவரும் 6 மாதங்களும் கூட இப்படித்தான் இருக்கும்!
அதற்காக, அறிமுகத்திற்கு முன்பே இதெல்லாம் சூப்பர் போன்.. இதெல்லாம் மொக்கை போன் என்கிற முடிவுக்கு யாராலும் வரமுடியாது. எந்தவொரு முடிவாக இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட ஸ்மார்ட்போன் அறிமுகமான பின்னரே, அதன் விலை நிர்ணயம் மற்றும் அது பேக் செய்யும் அம்சங்களை வைத்தே ஒரு தீர்மானத்திற்கு வரமுடியும். இது சாத்தியமாக - அடுத்தடுத்து அறிமுகமாகும் எல்லா புதிய போன்களின் மீதும் ஒரு கண் வைக்க வேண்டும். அப்படியாக இந்த ஜூன் மாதத்தில் அறிமுகத்தை உறுதி செய்துள்ள ஸ்மார்ட்போன்களின் (Upcoming Smartphone) பட்டியல் இதோ:

1. விவோ எக்ஸ் போல் 3 ப்ரோ (Vivo X Fold 3 Pro): இது 11.2 மிமீ தடிமன் மற்றும் 236 கிராம் எடையுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள முதல் போல்டபிள் ஸ்மார்ட்போன் ஆகும். இது ஜூன் 6-ல் அறிமுகம் செய்யப்படும். முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, 8.03-இன்ச் AMOLED மெயின் போல்டபிள் டிஸ்பிளே, 6.53-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் போன்றவைகளை கொண்டிருக்கும்.
2. ஒன்பிளஸ் 12 க்ளேஷியல் ஒயிட் (OnePlus 12 Glacial White): ஜூன் 6 ஆம் தேதியன்று இந்தியாவில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனின் புதிய க்ளேஷியல் ஒயிட் கலர் ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது லிமிடெட் எடிஷன் ஆக இருக்கும்; குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வாங்க கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் வழக்கமான ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனுடன் ஒற்றுப்போகலாம்.
3. ஷாவ்மீ 14 சிவி (Xiaomi 14 CIVI): ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த கேமரா-சென்ட்ரிக் ஸ்மார்ட்போன் ஜூன் 12, 2024 அன்று இந்தியாவில் அறிமுகமாகும். இது லைக்கா தொழில்முறை கேமரா செட்டப், 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மற்றும் 4700mAh பேட்டரி போன்ற முக்கிய அம்சங்களை கொண்டிருக்கும்.
4. ஹானர் 200 சீரீஸ் (Honor 200 Series): இது ஜூன் 12 அன்று உலகளவில் அறிமுகமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் கீழ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட்கள் மூலம் இயங்கும் 2 மாடல்கள் இருக்கலாம். மேலும் ஹானர் 200 சீரிஸ் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக் ஓஎஸ் 8 உடன் அறிமுகம் செய்யப்படலாம்.
5. மோட்டோ ஜி85 (Moto G85): 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் பிஓஎல்இடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 6எஸ் ஜென் 3 சிப்செட், 50எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப், 32எம்பி செல்பீ கேமரா போன்ற முக்கிய அம்சங்களை பேக் செய்யும் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, இருப்பினும் இது ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.
6. ரியல்மி ஜிடி 6 (Realme GT 6): இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு மீண்டும் வரும் 2-வது ஜிடி சீரிஸ் ஸ்மார்ட்போன் இதுவாகும். கடந்த மே மாதம் ரியல்மி ஜிடி 6 அறிமுகமானது. அதனை தொடர்ந்து ரியல்மி ஜிடி 6 மாடலும் அறிமுகத்திற்கு தயாராகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை, இருப்பினும் இது ஜூன் மாதம் அறிமுகப்படுத்தப்படும்.


Click it and Unblock the Notifications








