ஜியோ அதிரடி: ரூ.2,899/- மதிப்புள்ள மொபைல் வெறும் ரூ.699/-க்கு; மற்றும் பல.!

|

இந்தியாவின் முன்னணி பீச்சர் மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் பிராண்ட்களில் ஒன்றான ஜிவி மொபைல்ஸ் நிறுவனமானது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து புதிய வாய்ப்பொன்றை அறிவித்துள்ளது.

ஜியோ அதிரடி:  ரூ.2,899/- மதிப்புள்ள மொபைல் வெறும் ரூ.699/-க்கு.!

இந்த வாய்ப்பின் கீழ் வெறும் ரூ.699/க்கு 4ஜி வோல்ட் செயல்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனை ஜிவி மொபைல்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது. சமீபத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஜீவி ஸ்மார்ட்போன்களின் மீது ரூ.2,200/- என்கிற உடனடி கேஷ்பேக் சலுகையை அறிவித்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எந்தெந்த ஜிவி போன்கள் தகுதி பெற்றுள்ளது.?

எந்தெந்த ஜிவி போன்கள் தகுதி பெற்றுள்ளது.?

அதன்கீழ், ஜிவி ப்ரைம் பி444 (8ஜிபி), ஜிவி ப்ரைம் பி300, ஜிவி ப்ரைம் பி30, ஜிவி ரெவல்யூஷன் டின்டி3, ஜிவி எனர்ஜி இ12, மற்றும் ஜிவி எனர்ஜி இ3 ஆகியவை கருவிகள்ஜியோவின் கேஷ்பேக் வாய்ப்பிற்கு தகுதி பெற்றுள்ளன.

டச் மற்றும் டைப் ஸ்மார்ட்போன்

டச் மற்றும் டைப் ஸ்மார்ட்போன்

மேற்குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஸ்மார்ட்போன்களுமே இரட்டை சிம் ஆதரவு சாதனங்கள் மற்றும் ஆண்ட்ராய்டு கொண்டு இயங்குகின்றன. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிவி ரெவல்யூஷன் டின்டி3 ஆனது டச் மற்றும் டைப் ஸ்மார்ட்போன் ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.699/-க்கு கிடைக்கும்

ரூ.699/-க்கு கிடைக்கும்

இந்த பட்டியலில் ரூ.699/-க்கு கிடைக்கும் ஸ்மார்ட்போன் ஆக ஜிவி எனர்ஜி இ3 திகழ்கிறது. இதன் அசல் விலை நிர்ணயம் ரூ.2,899/- ஆகும்,ஜியோபுட்பால் வாய்ப்பளின்படி ரூ.198 அல்லது ரூ.299/-ஐ ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு இந்த கருவியின் மீது உடனடியாக ரூ.2,200/- கேஷ்பேக் கிடைக்கும்.0

ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்

ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்

கேஷ்பேக்கிற்கு பிறகு, இந்த ஸ்மார்ட்போனின் பயனுள்ள விலை ரூ.699/- ஆகும். இந்த வாய்ப்பின் கீழ் கிடைக்கும் இதர ஜிவி மொபைல்கள் பற்றிய விவரங்களை படத்தில் காணவும். ஜியோவின் ரூ.2,200/- கேஷ்பேக் ஆனது ரூ.50 மதிப்புள்ள 44 வவுச்சர்களின் வடிவத்தில், உங்களின் ஜியோ அக்கவுண்ட்டில் வரவு வைக்கப்படும். இந்த வாய்ப்பை பெற நீங்கள் மார்ச் 31, 2018 க்கு முன்னர் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும்.

மைஜியோ ஆப் மூலம் மட்டுமே

மைஜியோ ஆப் மூலம் மட்டுமே

கிடைக்கும் வவுச்சர்கள் அடுத்த 2022-ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதிக்குள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதும், ஒரே நேரத்தில் ஒரு வவுச்சர் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்றும் இந்த வாய்ப்பிற்காக நீங்கள் நிகழ்த்தும் ரூ.198 அல்லது ரூ.299/- ஆனது மைஜியோ ஆப் மூலம் மட்டுமே ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும்.

Best Mobiles in India

English summary
Jivi Mobiles and Reliance Jio Joins Hands to Offer a 4G VoLTE Smartphone at an Effective Price of Rs 699. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X