ஜியோபோன் - ஜியோபோன் 2 ஒப்பீடு: அதே அம்சங்கள், பணமோ இரட்டிப்பு.!

|

4ஜி எல்டிஇ திறன் கொண்ட மிகவும் லாபகரமாக திகழும் ஜியோபோனின் வெற்றியைத் தொடர்ந்து, 41வது ரிலையன்ஸ் ஏஜிஎம்-மில் இரண்டாவது தலைமுறையைச் சேர்ந்த ஜியோபோனின் அறிமுகம் குறித்து ரிலையன்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஜியோபோன் - ஜியோபோன் 2 ஒப்பீடு: அதே அம்சங்கள், பணமோ இரட்டிப்பு.!

ரிலையன்ஸ் ஜியோபோன் ரூ.1,500 (வைப்பு நிதியாக) விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் ஜியோபோன் 2-க்கு ரூ.2,999 என்று விலை நிர்ணயிக்கப்பட்டு, முதல் தலைமுறையைச் சேர்ந்த ஜியோபோனின் விலையில் இரட்டிப்பாக உள்ளது. இப்படியிருக்க, ஜியோபோனில் இருந்து ஜியோபோன் 2-க்கு மாறலாமா? என்பதை காண்போம்.

செயல்பாட்டிற்கான விலை

செயல்பாட்டிற்கான விலை

ரூ.1,500 என்ற விலை நிர்ணயத்தில் கிடைக்கும் ஒரு அட்டகாசமான சாதனமாக ஜியோபோன் விளங்கியது. அதில் ஒரு முதன்மை கேமரா, இரண்டாவது கேமரா, 4ஜி எல்டிஇ மற்றும் வோல்டி இணைப்பு என்று எண்ணற்ற அம்சங்கள் அளிக்கப்பட்டது. ஜியோபோன் 2-லும் அதே அம்சங்கள் அளிக்கப்படுகின்றன. சிறப்பம்சங்களைப் பொறுத்த வரை, இவ்விரு சாதனங்களும் ஒத்ததாகவே உள்ளன. அதே நேரத்தில், தரமான மாடலை விட, ஜியோபோனுக்கு குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளன எனலாம்.

வடிவமைப்பு

வடிவமைப்பு

வடிவமைப்பை பொறுத்த வரை, பழைய பிளாக்பேரி ஸ்மார்ட்போனைப் போல ஒரு "க்யூடபிள்யூஇஆர்டிவை" கீபோர்டை பெற்று, அதற்கு ஒத்த தோற்றத்தை ஜியோபோன் 2 கொண்டுள்ளது. ஜியோபோன் 2-ஐ பொறுத்த வரை இது ஒன்று தான் மேம்பாடாகத் தெரிகிறது. வழக்கமான டி4 கீபேட்டை கொண்ட ரிலையன்ஸ் ஜியோபோன் உடன் ஒப்பிடும் போது, இது போன்ற ஒரு சிறந்த கீபோர்டின் மூலம் பயனர்கள் பல்வேறு வழிகளில் பயன் பெறலாம்.

சாஃப்ட்வேர்

சாஃப்ட்வேர்

இவ்விரு சாதனங்களும் வழக்கமான கை ஓஎஸ் மூலம் தான் இயங்குகின்றன என்பதால், இவ்விரு சாதனங்களும் வாட்ஸ்அப், யூடியூப் மற்றும் பேஸ்புக் போன்ற அம்சங்களை ஒரு சாஃப்ட்வேர் மேம்பாடு மூலம் ஆதரிக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள், தங்களுக்கே உரித்தான கூகுள் அசிஸ்டெண்ட் போன்ற ஒரு கூட்டம் ஒரு கூகுள் அப்ளிகேஷன்களைக் கொண்டுள்ளன. இதன்மூலம் இந்த போன்களில் வாய்ஸ் கமெண்ட் கூட இயக்க முடிகிறது.

ஹார்ட்வேர்

ஹார்ட்வேர்

இவ்விரு ஸ்மார்ட்போன்களும் ஒத்த ஒரு கூட்டம் ஹார்ட்வேர்களை பகிர்ந்து கொண்டுள்ளன. இதில் வெளியோட்டமான ஒரு மாற்றம் என்றால், ஜியோபோன் ஒரு 2.4 இன்ச் டிஸ்ப்ளே-யை செங்குத்தாகப் பெற்றுள்ளது. ஆனால் ஜியோபோன் 2 இல், அதே பகுப்பாய்வு உடன் கூடிய ஒரு கிடைமட்டமான டிஸ்ப்ளேயை பெற்றுள்ளது.

இவ்விரு போன்களிலும் 4 ஜிபி ரேம் (ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மூலம் விரிவாக்கம் செய்யக் கூடியது) உடன் 512 எம்பி சேமிப்பகம் காணப்படுகிறது. இவ்விரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பின்பகுதியில் 2 எம்பி முதன்மை கேமராவை கொண்டுள்ளது. மேலும் ஒரு முன்பகுதியை நோக்கிய விஜிஏ கேமராவை கொண்டு, நேட்டீவ் வீடியோ காலிங் திறனைப் பெற்றுள்ளது. கடைசியாக, இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் பயனரே மாற்றி அமைக்கக்கூடிய 2000 எம்ஏஹெச் பேட்டரி காணப்படுகிறது.

முடிவு

முடிவு

ஏற்கனவே நீங்கள் ஒரு ஜியோபோனை பயன்படுத்தி வரும் நிலையில், ஜியோபோனுக்கு பதிலாக ஜியோபோன் 2-யை மாற்றி கொள்ள விரும்பினால், க்யூடபிள்யூஇஆர்டிவை கீபேடை தவிர எந்தொரு பெரிய வித்தியாசத்தையும் காண முடியவில்லை. உங்கள் ஜியோபோனில் சில அப்ளிகேஷன்களை கையாள முடியாத நிலையில், ஜியோபோன் 2-க்கு மாற்றும் யோசனை சிறந்தது. இந்நிலையில் ஒரு புதிய ஜியோபோன் வாங்கலாம் என்று நீங்கள் நினைத்தால், மான்சூன் ஹன்காமா சலுகையின் கீழ் வெறும் 501 ரூபாய்க்கு கிடைக்கும் ஜியோபோனை வாங்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
JioPhone Vs JioPhone 2: Double the money, same features: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X