கொத்தா ஆர்டர்.. வெறும் ரூ.2,599 போதும்.. UPI பேமெண்ட்.. 4G கனெக்டிவிட்டி.. DIGITAL கேமரா.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படும் பெரும்பாலான அம்சங்களுடன் வெறும் ரூ.2,599 பட்ஜெட்டில் ஜியோபோன் ப்ரைமா 4ஜி (JioPhone Prima 4G) மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. யுபிஐ பேமெண்ட் சப்போர்ட், பேஸ்புக், வாட்ஸ்அப் ஆப்கள், 4ஜி கனெக்டிவிட்டி என்று பின்னியெடுக்கிறது.
அதுமட்டுமல்லாமல், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், செல்பீ கேமரா போன்ற நல்ல நல்ல பீச்சர்களுடன் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கிறது. இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி மாடலில் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன? எங்கு விற்பனைக்கு கிடைக்கிறது? உள்ளிட்ட முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ஜியோபோன் ப்ரைமா 4ஜி அம்சங்கள் (JioPhone Prima 4G Specifications): இந்த ஜியோ போன் 2.4 இன்ச் (240 x 320 பிக்சல்கள்) டிஃஎப்டி (TFT) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 720p ரெசொலூஷன் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் கய்ஓஎஸ் 2.5.3 (KaiOS 2.5.3) கொண்ட ஆர்ம் கோர்டெக்ஸ்டிஎம் ஏ53 (ARM CortexTM A53) சிப்செட் வருகிறது.
இந்த ஜியோபோன் ப்ரைமாவில் 512 எம்பி ரேம் மற்றும் 128 ஜிபி எஸ்டி கார்டு சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. சிங்கிள் நானோ சிம் சிலாட் வருகிறது. இதுவொரு ஜியோலாக்டு (JioLocked) மாடலாகும். ஆகவே, இந்த போனில் ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) சப்போர்ட் உள்ளது.
அதேபோல ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ சாவன் (JioSaavn) போன்ற ஜியோ ஆப்கள் மட்டுமல்லாமல், யூடியூப் (YouTube), பேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற சோஷியல் மீடியா ஆப்களையும் பயன்படுத்தி கொள்ள முடியும். அதோடு ஜியோபே (JioPay) பேமெண்ட் ஆப் மூலம் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த போனில் 0.3 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 0.3 செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதில் கியூஆர் கோட் ஸ்கேனிங் சப்போர்ட் வருகிறது. இன்பில்ட் மைக்ரோபோன் கொண்டிருக்கிறது. இந்த ஜியோபோன் ப்ரைமாவில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் ப்ளூடூத் வி5.0 (Bluetooth v5.0) கனெக்டிவிட்டி அம்சங்கள் வருகின்றன.
அதேபோல 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) சப்போர்ட் கொண்டுள்ளது. எச்டி வீடியோ மற்றும் வாய்ல் கால்களை செய்து கொள்ளலாம். அதேபோல ஜியோசாட் (JioChat) ஆப் மூலம் எஸ்எம்எஸ்களை செய்துகொள்ள முடியும். இந்த போனில் 1,800mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எல்இடி டார்ச் (LED Torch) மற்றும் எப்எம் ரோடியோ (FM Radio) வருகிறது.
இந்த ஜியோ போன் 23 இந்திய மொழிகள் சப்போர்ட் கொண்டிருக்கிறது. போட்டரியோடு வெறும் 110 கிராம் எடை மட்டுமே கொண்டுள்ளது. பிரீமியம் பிஷனிங் டிசைனில் ப்ளூ (Blue) கலரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி மாடலின் விலை ரூ.2,599ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அமேசான் (Amazon), ஜியோமார்ட் (JioMart) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) ஆகிய தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போனுக்கு 1 வருட வாரண்டி கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ போன் ப்ரைமா மாடலை ஆர்டர் செய்தால், போன், பேட்டரி மற்றும் சார்ஜர் வழங்கப்படும்.

மிகவும் மலிவான விலையில் 4ஜி கனெக்டிவிட்டி, வீடியோ காலிங், சோஷியல் மீடியா ஆப்ஸ், யுபிஐ பேமெண்ட்ஸ் போன்ற அம்சங்களை கொண்ட போன் வேண்டுமானால், இந்த போனை தேர்ந்தெடுங்கள். இது முந்தைய மாடலை விட பிரீமியம் டிசைன், குவாலிட்டி கீபோர்ட் மற்றும் பாடி கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








