Home
Mobile

லட்டு மாதிரி Mobile.. சக்கரையா ஆஃபர்.. அசால்ட்டாக அசத்தும் அம்பானி.. மீண்டும் விற்பனையில் JioPhone 4G போன்..

இந்தியாவில் உள்ள பொதுமக்களுக்கு மிகவும் மலிவு விலையில் 4ஜி போனை (4G phone) வழங்க முகேஷ் அம்பானி (Mukesh Ambani) இப்போது முடிவு செய்துள்ளார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், அம்பானிக்கு சொந்தமான ஜியோ (Jio) நிறுவனம் இப்போது அதன் பட்டியலில் உள்ள ஜியோபோன் ப்ரைமா (JioPhone Prima) என்ற சாதனத்தை மீண்டும் சலுகையுடன் விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த கீபேட் ஃபீச்சர் போன் (Keypad feature phone) பற்றிய சிறப்பம்சம் மற்றும் விலை விபரங்களை இப்போது பார்க்கலாம். மிகவும் மலிவு விலையில் புதிய போன் வாங்க திட்டமிட்டவர்கள் இந்த பதிவை முழுமையாக படிக்கலாம்.

ஜியோபோன் ப்ரைமா 4ஜி (JioPhone Prima 4G) போனை ஜியோ நிறுவனம் கடந்த 2023 ஆம் வருடம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஜியோபோன் ப்ரைமாமிகவும் குறைந்த விலையில் மக்களை 4ஜி வட்டத்திற்குள் அழைத்து செல்கிறது. இது KaiOS இயங்குதளத்தில் இயங்குகிறது. இது இணைய அணுகலைக் கொண்ட 4G இயக்கப்பட்ட கீபேட் ஃபீச்சர் போனாகும் (Jio keypad feature phone).

லட்டு மாதிரி Mobile.. சக்கரையா ஆஃபர்.. அசால்ட்டாக அசத்தும் அம்பானி..

ஜியோபோன் ப்ரைமா 4ஜி (JioPhone Prima 4G):

இதுவொரு ஃபீச்சர் போன் (Jio feature phone) என்று குறிப்பிடப்பட்டாலும், ஒரு ஸ்மார்ட்போனில் என்ன அடிப்படை வசதிகள் எல்லாம் இருக்குமோ அது எல்லாமே உங்களுக்கு இந்த போனில் இருக்கிறது. இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி சாதனம் பிரபலமான யூடியூப் (YouTube), வாட்ஸ்அப் (WhatsApp), பேஸ்புக் (Facebook) மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் (Google Assistant) போன்ற பல அம்சங்களை இது ஆதரிக்கிறது.

இது தவிர இந்த போனில் பொழுதுபோக்கு அம்சத்திற்கும் குறைவில்லை, காரணம் இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோசாவன் (JioSaavn), ஜியோ நியூஸ் (JioNews) மற்றும் ஜியோ சினிமா (JioCinema) போன்ற பல ஜியோ பொழுதுபோக்கு மொபைல் சேவைக்கான அணுகலை இந்த போன் வழங்குகிறது. அதேபோல், டிஜிட்டல் பேமெண்ட் சேவையும் இந்த போனில் உள்ளது. ஆம், ஜியோ பே (JioPay) வழியாக UPI மூலம் கட்டணங்களை செலுத்த அனுமதிக்கிறது.

QR ஸ்கேன் செய்தும் கட்டணங்களை செலுத்த இந்த போன் ஆதரவை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது 23 இந்திய மொழிகளை (Indian language) ஆதரிக்கிறது. இதில் தமிழ் (Tamil) மொழியும் அடங்கும் எனபது குறிப்பிடத்தக்கது. இந்திய பயனர்கள் அணைத்து மொழிகளிலும் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice assistance) அணுக அனுமதிக்கும். இதில் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் அம்சமும் உள்ளது. ஆனால், புளூடூத் 5.0 (Bluetooth 5.0) மற்றும் வைஃபை (WiFi) ஆதரவையும் கொண்டிருக்கும்.

ஜியோபோன் ப்ரைமா 4ஜி விலை (JioPhone Prima 4G Price):

இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி ஃபீச்சர் போன் 2.4" இன்ச் அளவு கொண்ட TFT LCD டிஸ்பிளேவை (Display) கொண்டுள்ளது. இது 1,800mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது குறிப்பிடப்படாத முன் மற்றும் பின்புற டிஜிட்டல் கேமராக்களையும் கொண்டுள்ளது. JioPhone Prima 4G ஐ ஜியோமார்ட் (JioMart), அமேசான் (Amazon) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) போன்ற தளங்களில் இருந்து இப்போது வாங்க கிடைக்கிறது.

ஜியோபோன் ப்ரைமா 4ஜி பீச்சர் போனின் அசல் விலை இந்திய மதிப்பில் ரூ. 3999 ஆகும். ஆனால், ஜியோ வழங்கும் புதிய சிறப்பு சலுகைக்கு பிறகு, இந்த ஜியோபோன் ப்ரைமா சாதனம் வெறும் ரூ. 2,599 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த பீச்சர் போன் சாதனம் தற்போது ப்ளூ (Blue) மற்றும் மஞ்சள் (Yellow) நிறங்களில் வாங்க கிடைக்கிறது. இந்த போன் மீண்டும் இந்தியாவில் ஸ்டாக் (Stock) செய்யப்பட்டுள்ளது. குறைந்த அளவு ஸ்டாக் மட்டுமே இருப்பதினால், முந்திக்கொள்ளவும்.

Best Mobiles in India

English summary
JioPhone Prima 4G Feature Phone Again Comes To Stock Buy Now At Rs 2599 As Offer Price Immediately
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X