Home
Mobile

தீபாவளிக்கு புதிய ஜியோ 4ஜி போன் வாங்கப்போறீங்களா? அதுக்கு முன்னாடி இதை செக் பண்ணுங்க.. முழு விவரம்..

ஜியோ நிறுவனம் 5ஜி சேவையைக் கொண்டுவந்த போதிலும் 4ஜி போன்களை அறிமுகம் செய்வதை நிறுத்தவில்லை. அதாவது தொடர்ந்து இந்நிறுவனம் 4ஜி பீச்சர் போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது. அதேசமயம் 4ஜி போன்களில் பல்வேறு புதிய அம்சங்களை கொண்டுவருகிறது. எனவே தான் இந்நிறுவனத்தின் பீச்சர் போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சமீபத்தில் ஜியோபோன் ப்ரைமா 4ஜி (JioPhone Prima 4G) எனும் பீச்சர் போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம். தற்போது முன்னணி ஆன்லைன் தளங்களில் இந்த புதிய பீச்சர் போன் ரூ.2599 விலையில் கிடைக்கிறது. மேலும் இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்கள் என்னென்ன? நம்பி வாங்கலாமா? வேண்டாமா என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தீபாவளிக்கு புதிய ஜியோ 4ஜி போன் வாங்கப்போறீங்களா?

நோக்கியா பீச்சர் போன்களை போன்று தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி பீச்சர் போன். மேலும் இந்த ஜியோ போனின் எடை 100 கிராம் ஆகும். எனவே அனைத்து இடத்திற்கு எளிமையாக ஜியோபோன் ப்ரைமா 4ஜி போனை எடுத்துச் சென்று அருமையாகப் பயன்படுத்த முடியும்.

அதேசமயம் நீல நிறத்தில் ஜியோபோன் ப்ரைமா 4ஜி போன் கிடைக்கிறது ஜியோபோன் ப்ரைமா 4ஜி. ஆனால் கூடிய விரைவில் இந்த போன் மஞ்சள் நிறத்திலும் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது. எல்இடி பிளாஷ் ஆதரவு கொண்ட ரியர் கேமரா இதில் உள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 0.3எம்பி கேமரா இதில் உள்ளது. குறிப்பாக 3.5எம்எம் ஆடியோ ஜாக் ஆதரவும் இதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு புதிய ஜியோ 4ஜி போன் வாங்கப்போறீங்களா?

ஜியோபோன் ப்ரைமா போனில் 4ஜி வோல்ட்இ ஆதரவு உள்ளது. இதன் மூலம் தெளிவான 4ஜி அழைப்புகளை மேற்கொள்ள முடியும். அதேபோல் நீங்கள் ஒரு கீபேட் ஃபோன் பிரியர் என்றால், இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி போனை நம்பி வாங்கலாம். அதாவது தனித்துவமான மற்றும் மென்மையான அனுபவத்தைக் கொடுக்கும் ஜியோபோன் ப்ரைமா 4ஜி போனின் கீபேட்.

4ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 512எம்பி ரேம் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த பீச்சர் போன். அதாவது நீங்கள் மெமரி 128ஜிபி மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

அதேபோல் ஜியோபோன் ப்ரைமா 4ஜி மாடலில் ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போனில் உள்ள ஜியோபே (JioPay) பேமெண்ட் ஆப் மூலம் யுபிஐ (UPI) சேவையை பயன்படுத்த முடியும். குறிப்பாக யுபிஐ வசதி இந்த போனில் இருப்பதால் நல்ல வரவேற்பு கிடைக்கும். பின்பு இந்த போனில் கய்ஓஎஸ் 2.5.3 (‎KaiOS 2.5.3) கொண்ட ஏஆர்எம் கோர்டெக்ஸ்டிஎம் ஏ53 (ARM CortexTM A53) சிப்செட் உள்ளது.

இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ சாவன் (JioSaavn), யூடியூப் (YouTube), பேஸ்புக் (Facebook) மற்றும் வாட்ஸ்அப் (WhatsApp) போன்ற அனைத்தையும் இந்த ஜியோபோன் ப்ரைமா 4ஜி போனில் பயன்படுத்த முடியும். மேலும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டண்ட் ஆதரவுடன் கூட இந்த அட்டகாசமான ஜியோபோன் ப்ரைமா 4ஜி மாடலில் பெறமுடியும்.

தீபாவளிக்கு புதிய ஜியோ 4ஜி போன் வாங்கப்போறீங்களா?

குறிப்பாக ஜியோபோன் ப்ரைமா 4ஜி போனில் ஜியோசாட் (JioChat) ஆப் உள்ளது. இதன் மூலம் எஸ்எம்எஸ்களை செய்துகொள்ள முடியும். பின்பு இந்த ோனில் எல்இடி டார்ச் மற்றும் எப்எம் ரேடியோ ஆதரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ப்ளூடூத் வி5.0 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஜியோ 4ஜி போன்.

1800 எம்ஏஎச் பேட்டரியுடன் வெளிவந்துள்ளது ஜியோபோன் ப்ரைமா 4ஜி மாடல். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யுபிஐ வசதி, 4ஜி ஆதரவு, வாட்ஸ்அப், அசத்தலான கேமராக்கள் போன்ற அனைத்து சிறப்பு அம்சங்களும் இந்த ஜியோ போனில் இருப்பதால் நம்பி வாங்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioPhone Prima 4G Everything you need to know: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X