மீண்டும் மீண்டுமா? டூயல் சிம்.. புதிய JioPhone கொண்டுவரும் அம்பானி.. எந்த மாடல்?
ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்த்தால், அது மீண்டும், மீண்டும் 4ஜி பீச்சர் போன்களையே அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது வெளியான தகவலில், ஜியோ நிறுவனம் டூயல் சிம் ஆதரவுடன் ஜியோபோன் ப்ரைமா 2 மாடலை அறிமுகம் செய்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்பு சிங்கிள் சிம் ஆதரவுடன் ஜியோபோன் ப்ரைமா 2 போன் வெளிவந்தது.
BIS சான்றிதழ் தளத்தில் JFP1AE-DS என்ற மாடல் நம்பர் உடன் ஜியோ போன் காணப்பட்டுள்ளது. DS என்பது டூயல் சிம்மை குறிக்கும். இது டூயல் சிம் கொண்ட ஜியோபோன் ப்ரைமா 2 தான் என்று கூறப்படுகிறது. மற்றபடி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஜியோபோன் ப்ரைமா 2 அம்சங்களுடன் இந்த டூயல் சிம் கொண்ட மாடல் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இப்போது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ஜியோபோன் ப்ரைமா 2 மாடலின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஜியோபோன் ப்ரைமா 2 அம்சங்கள் (JioPhone Prima 2 specifications): 2.4 இன்ச் அளவு கொண்ட வளைந்த டிஸ்பிளேவை (display) கொண்டுள்ளது ஜியோபோன் ப்ரைமா 2. மேலும் இதில் இதில் டச் அம்சங்கள் கிடையாது. இந்த போன் முழுமையாக அதன் கீபேட் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதேபோல் 512MB ரேம் (RAM) உடன் 4GB ஸ்டோரேஜ் (Storage) ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
அதேபோல் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது ஜியோபோன் ப்ரைமா 2. அதாவது இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு (microSD card) விருப்பமும் இருக்கிறது. இதன் மூலம் இந்த போனின் ஸ்டோரேஜ்ஜை நீங்கள் 128GB வரை அதிகரித்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது.
ஜியோபோன் ப்ரைமா 2 டிவைஸ் குவால்காம் இன் பிராசஸர் உடன் இயங்குகிறது. இந்த போனில் ரியர் கேமரா மற்றும் செல்பி கேமராவும் உள்ளது. இது 0.3MP திறனில் இயங்கக்கூடியது. குறிப்பாக ஜியோ பே யுபிஐ செயலி ஆதரவு கொண்டுள்ளது இந்த போன். எனவே QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் அனுப்ப உதவும் இந்த போனின் கேமரா.
இந்த ஜியோபோன் ப்ரைமா 2 ஆனது 2000mAh பேட்டரி உடன் வருகிறது. எனவே இது நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். இந்த சாதனம் 23 மொழிகளை ஆதரிக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இதில் ஹிந்தி, மலையாளம், தெலுகு மற்றும் தமிழும் அடங்கும். அதேபோல் இந்த சாதனம் இது KaiOS 2.5.3 வெர்ஷனில் இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ காலிங், கூகுள் அசிஸ்டண்ட், யூடியூப், ஃபேஸ்புக், ஜியோசாட், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோசாவ்ன் போன்றவற்றை ஆதரிக்கிறது ஜியோபோன் ப்ரைமா 2. குறிப்பாக இது 1 வருட உத்தரவாதத்துடன், 6 மாத இன்பாக்ஸ் சாதனங்களின் வாரன்டி உடன் அறிமுகமானது. அதேபோல் இந்த போன் ரூ.2,799 விலையில் வெளிவந்தது.
விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள டூயல் சிம் கொண்ட ஜியோபோன் ப்ரைமா 2 மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் 4ஜி பீச்சர் போன்களை விட 5ஜி போன்களை அறிமுகம் செய்தால் நல்ல வரவேற்பு இருக்கும்.


Click it and Unblock the Notifications