Home
Mobile

குடும்பமே வாங்கும் விலை.. சைலெண்டாக ரூ.2799-க்கு இறக்கிய அம்பானி.. இப்போவே தீபாவளி.. JioPhone Prima 2 வந்தது!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், சத்தமே இல்லாமல் அடுத்த சம்பவத்தை செய்துள்ளது. கட்டண உயர்வுக்கு பிறகு கடுப்பில் இருந்த கஸ்டமர்கள்கூட குஷியாகும்படியான விலைக்கு முந்தைய மாடல்களைவிட கூடுதல் பீச்சர்களுடன் ஜியோபோன் பிரைமா 2 4ஜியை (JioPhone Prima 2 4G) இந்திய மார்கெட்டில் களமிறக்கி இருக்கிறது. தீபாவளி நெருங்கும் நேரத்தில் இதுபோன்ற வெளியீட்டை செய்யும் ஜியோ இப்போது முன்கூட்டியே செய்து முடித்துள்ளது. கம்மி காசில் பக்கா 4ஜி போனாக இந்த மாடல் இருக்கிறது.

இந்த டிஜிட்டல் உலகுக்கு ஏற்றபடி யூடியூப் (YouTube), ஃபேஸ்புக் (Facebook), யுபிஐ பேமெண்ட் (UPI Payment), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) போன்ற ஒட்டுமொத்த ஆப்களையும் கொண்டிருக்கிறது. இதுபோக ஜியோசாட் (JioChat) ஆப் மூலம் வீடியோ காலிங் செய்து கொள்ளவும் முடியும்.

குடும்பமே வாங்கும் விலை.. சைலெண்டாக ரூ.2799-க்கு இறக்கிய அம்பானி!

ஜியோபோன் பிரைமா 2 4ஜி அம்சங்கள் (JioPhone Prima 2 Specifications): இந்த பிரைமா 2 போனில் 2.4 இன்ச் (320 x 240 பிக்சல்கள்) கியூவிஜிஏ (QVGA) டிஸ்பிளே வருகிறது. கர்வ்ட் டிசைன் (Curved Design) கொண்டிருக்கிறது. குவால்காம் எஸ்ஓசி (Qualcomm SoC) சிப்செட் மற்றும் கய் ஓஎஸ் 2.53 (KAI OS 2.5.3) பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ஓஎஸ் முக்கிய ஆப்கள் சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஆகவே, வாட்ஸ்அப், பேக்ஸ்புக், யூடியூப், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோசாவன், ஜியோபே, ஜியோசாட் போன்ற மல்டிபிள் ஆப்களை பயன்படுத்தி கொள்ளலாம். சொல்லப்போனால், 4ஜி வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கும் என்பதால், லைவ் டிவி சேனல்கள் முதல் டெலிவிஷன் ஷேக்கள் வரையில் ஸ்மார்ட்போனுக்கு நிகராக ஸ்ட்ரீம் செய்து கொள்ள முடியும்.

அதேநேரத்தில் ஜியோபே (JioPay) யுபிஐ மற்றும் கியூஆர் கோட் ஸ்கேனிங் செய்து பணப்பரிமாற்றம் செய்து கொள்ளலாம். அதற்கு ஏற்ப ரியர் கேமரா (Rear Camera) வருகிறது. அதேபோல வாய்ஸ் கால்கள் மட்டுமல்லாமல், வீடியோ கால்களையும் செய்து கொள்ள 0.3 எம்பி விஜிஏ (VGA) செல்பீ கேமரா வருகிறது. ஜியோசாட் ஆப் மூலம் வீடியோ கால்களை செய்ய முடியும்.

குடும்பமே வாங்கும் விலை.. சைலெண்டாக ரூ.2799-க்கு இறக்கிய அம்பானி!

இந்த ஜியோபோன் பிரைமா 2 4ஜி போனில் 512 எம்பி ரேம் வருகிறது. மியூசிக் மற்றும் போட்டோக்களுக்கான 4 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது. இதுபோக 128 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) வருகிறது. 3.5 எம்எம் ஆடியோ ஜாக் (Audio Jack) மற்றும் எப்எம் ரேடியோ (FM Radio) சப்போர்ட் கொண்டிருக்கிறது. 23 மொழிகளில் பயன்படுத்தலாம்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகள் அடங்கும். இந்த போனின் கனெக்டிவிட்டியை பார்க்கையில் 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), ப்ளூடூத் 5.0 (Bluetooth 5.0), யுஎஸ்பி 2.0 (USB 2.0) போர்ட் கொண்டிருக்கிறது. 2000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான எல்இடி டார்ச்ச் (LED Torch) சப்போர்ட் கொண்டிருக்கிறது.

ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் இந்த பீச்சர் போனிலும் வருகிறது. லக்ஸ் ப்ளூ (Luxe Blue) கலரில் பிரீமியம் பீச்சர் போன் லுக் கொடுக்கிறது. அதே நேரத்தில் பில்ட் குவாலிட்டி பக்காவாக இருக்கிறது. இந்த ஜியோபோன் பிரைமா 2 4ஜி போனின் விலை ரூ.2799 ஆக இருக்கிறது. ஏற்கனவே, விற்பனை தொடங்கி விட்டது.

ஆகவே, அமேசான் (Amazon), ஜியோமார்ட் (JioMart) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களில் (Reliance Digital Store) ஆர்டருக்கு கிடைக்கிறது. முந்தைய மாடலைவிட கூடுதல் பீச்சர்களை பேக் செய்துள்ளது. ஆனால், ஜியோ பிரைமா போன்களுக்கு வழங்கப்படும் ப்ரீபெய்ட் திட்டங்களில் (JioPhone Prima Prepaid Plan) எந்தவித மாற்றும் செய்யப்படவில்லை.

Best Mobiles in India

English summary
JioPhone Prima 2 4G With 2000mAh Battery Sale From Amazon Under Rs 30000 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X