இன்று முதல் ஜியோபோன் : கடைசி நிமிடத்தில் கிளம்பும் பீதிகளும், ஆச்சரியங்களும்.!

|

முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜியோபோன் - 500 மில்லியன் பயனர்களை சென்றடைய தயார் நிலையில் உள்ளது. 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி (அதாவது நாளை) மாலை 5.30 மணி முதல் முன்பதிவிற்கு திறந்துவிடப்படும் இக்கருவி வாடிக்கையாளர்களுக்கு பூஜ்ஜிய விலையில், அதாவது திறம்பட இலவசமாக கிடைக்கும் என்பது சிறப்பம்சம்.

இன்று முதல் ஜியோபோன் : கடைசி நிமிட பீதிகளும், ஆச்சரியங்களும்.!

இக்கருவியை வாங்க ரூ.1,500/- என்ற முழுமையாக திரும்பி பெறக்கூடிய செக்யூரிட்டி டெபாஸிட் (பாதுகாப்பு வைப்பு) தொகையை செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் முதலில் முன்பதிவு செய்பவர்களுக்கு முதலில் விநியோகம் செய்யப்படும்" என்ற அடிப்படையில் வாடிக்கையாளர்கள் ஜியோபோனை பெறுவார்கள்.

முன்பதிவு செய்வது எப்படி.?

முன்பதிவு செய்வது எப்படி.?

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்களின் வழியாக ஜியோபோன் ஒன்றை முன்பதிவு செய்யலாம். ஆப்லைனில் கருவியை முன்பதிவு செய்ய ஜியோ சில்லறை விற்பனையாளர்கள் அல்லது ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்களை அணுகவும். ஆன்லைனில் முன்பதிவு செய்ய மைஜியோ ஆப் அல்லது நிறுவனத்தின் சொந்த வலைத்தளமான ஜியோ.காம் (jio.com) தளத்தை அணுகவும்.

என்னென்ன நன்மைகள்.?

என்னென்ன நன்மைகள்.?

ஜியோபோனில் வாய்ஸ் கால்கள் எப்போதும் இலவசமாக இருக்கும். பயனர்கள் தங்களுக்கு பொருத்தமான ஜியோ திட்டங்களை ரீசார்ஜ் செய்வதின் மூலம் ஜியோபோனின் அன்லிமிடெட் டேட்டாவை அணுகலாம்.

மாதம் ரூ153/- ரீசார்ஜ்

மாதம் ரூ153/- ரீசார்ஜ்

அதாவது ஜியோவின் இலவச குரல் மற்றும் வரம்பற்ற தரவை பெற மாதம் ரூ153/- ரீசார்ஜ் நிகழ்த்தினால் மட்டுமே. இந்த விலை நிர்ண்யமானது தற்போது சந்தையில் கிடைக்கும் ரீசார்ஜ் விலை நிர்ண்யத்தில் 30% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து வகையான பயனர்களுமே ஜியோபோனை அணுகும் நோக்கில் 2 ரீசார்ஜ் திட்டங்களை ஜியோ அறிமுகம் செய்துள்ளது ரூ.53/- என்ற ஒரு வாரத்திடம் மற்றும் ரூ.23/- என்ற 2 நாள் திட்டம். இந்த 2 திட்டங்களுமே ஒரே நன்மைகளை வழங்கும்.

பயன்பாடு

பயன்பாடு

ஜியோபோன் ஆனது, 400-க்கும் மேற்பட்ட நேரடி தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் ஜியோ டி.விஉடபட உட்பட ஜியோம்யூஸிக், ஜியோசினிமா ஆகிய முன்-ஏற்றப்பட்ட பயன்பாடுகளின் தொகுப்பும் கொண்டுள்ளது.மேலும் நுகர்வோர் தொடர்ந்து சிறந்த சேவைகளை அனுபவிப்பதை உறுதி செய்வதற்காக இது மிகவும் பிரபலமான உடனடி செய்தியையும், சமூக வலைப்பின்னல் பயன்பாடுகளையும் உள்ளடக்கியுள்ளது.

முன்பதிவு பணம் எவ்வளவு.?

முன்பதிவு பணம் எவ்வளவு.?

ஒரு ஜியோபோன் முன்பதிவை நிகழ்த்த நீங்கள் ரூ.500/- என்ற (முழுமையாக திருப்பியளிக்கப்படும்) முன்பணம் செலுத்த வேண்டும்.மீதமுள்ள ரூ.1000/-ஐ ஜியோபோனின் டெலிவரி அன்று கொடுக்கவேண்டும். ஒரு பயனர் 36 மாதங்களுக்கு ஜியோபோனை பயன்படுத்திய பின்னர் பயன்படுத்தப்பட்ட ஜியோபோனை திரும்பி அளிப்பதின் மூலம் ரூ.1500/- என்ற பாதுகாப்பு வைப்பு தொகையை முழுமையாக திரும்ப பெற முடியும். ஒருவேளை நிர்ணயிக்கப்பட்டுள்ள காலத்திற்கு முன்னரே கருவியை கொடுத்தால் முழுமையாக 1500 ரூபாய் கிடைக்காது எனினும் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும்.

புரட்சிகர கருவி

புரட்சிகர கருவி

ஜியோபோன், ஒரு புரட்சிகர சாதனம் என்பதில் சந்தேகமும் இல்லை மற்றும் சந்தையில் மீண்டும் ஒரு ஜியோ புரட்சியை உண்டாக்கவும் தவறாது. இந்த சாதனம் ஒரு 2.4-அங்குல க்யூவிஜிஏ (QVGA) டிஸ்ப்ளே கொண்டுள்ளது மற்றும் எஸ்டி அட்டை ஆதரவும் கொண்டுள்ளது. மேலும் ஒரு எப்எம் ரேடியோ, டார்ச்லைட், ரிங்டோன்கள், தொலைபேசி கான்டாக்ட்ஸ், கல் ஹிஸ்டரி மற்றும் பல பீச்சர் போன்களுக்கே உரிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

ஜியோ மீடியா கேபிள்

ஜியோ மீடியா கேபிள்

ஜியோபோனை ஜியோ மீடியா கேபிள் உதவியுடன் டிவியுடன் இணைக்கலாம் என்ற இதன் அம்சம், பீச்சர் சாதனத்தை ஒரு ஸ்மார்ட்போனாக மாற்றும் அம்சம் என்று கூறலாம்.

Best Mobiles in India

English summary
JioPhone Pre-Booking Opens on August 24 – 5pm amidst high demand. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X