மக்களே நீங்கள் எதிர்பார்த்த ரூ.501-க்கு ஜியோபோன்: ஜூலை 21-வருகிறது.!
மான்சூன் ஹங்கமா என்ற ஆப்பரில் விற்கப்படும் போனில் விலை ரூ.501 ஆகும். இந்த புதிய போன் ஜூலை 21ம் தேதி விற்பனைக்கு வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ போன் நிறுவனம் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு அதிரடி ஆப்பர்களை அறிவித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஏராளமான புதிய வாடிக்கையாளர்கள் இணைந்து வருகின்றனர். இதில் மான்சூன் ஹங்கமா என்ற புதிய அறிவிப்பை முகேஸ் அம்பானி ஆர்ஐஎல்-ன் 41ம் ஆண்டு பொது கூட்டத்தில் வெளியிட்டார்.

ஆப்பர் விலை:
மான்சூன் ஹங்கமா என்ற ஆப்பரில் விற்கப்படும் போனில் விலை ரூ.501 ஆகும். இந்த புதிய போன் ஜூலை 21ம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த போனை பெற விரும்பு வோர் ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையத்தில் புதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.

போனில் வசதிகள்:
ரூ.501க்கு விற்கப்படும் ஜியோ போனில் குரல் அழைப்புகள், எஸ்எம்எஸ், யூடியூப், வாட்ஸ்-ஆப், பேஸ்புக் உள்ளிட்ட வசதிகள் அடங்கியுள்ளதை ஜியோ போன் நிறுவனத்தின் ஏஜிஎம்கள் ஆஹாஸ், இஷா அம்பானி ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

ஒரே தவணையில் பணம்:
ரூ.501 ஜியோ போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் எந்த ஒரு இலவச சேவைகளையும் பெற முடியாது. மேலும் சலுகை விலை போனை பெற ஒரே தவணையில் பணம் செலுத்த வேண்டும்.

எக்ஸ்சேஞ்:
ரூ.1500க்கு போனை வாங்கிய வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேஞ் முறையில், சலுகை விலையில் கிடைக்கும் போனை மாற்றிக் கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications