Just In
- 23 hrs ago
மூன்று அதிநவீன ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கம்மி விலையில் இறக்கிவிட்ட Fire Boltt.!
- 1 day ago
அமேசானில் வேலை வீட்டில் இருந்தே வருமானமா? இங்க வாங்க தம்பி.! கொத்தாக தூக்கிய போலீஸ்!
- 1 day ago
ஆதார் கார்ட் பயனர்கள் அனைவருக்கும் இது கட்டாயம்! UIDAI வெளியிட்ட புது அறிவிப்பு.! என்ன தெரியுமா?
- 1 day ago
64எம்பி ரியர் கேமரா, சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் பட்டைய கிளப்பும் iQOO போன்: அறிமுக தேதி இதுதான்!
Don't Miss
- Automobiles
2கே கிட்ஸ் எல்லாம் இனி இந்த பைக் மேல தான் பைத்தியமா சுத்துவாங்க! அல்ட்ராவைலட் எஃப்77 ரிவியூ!
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- News
சேலம் மேட்டூர் அருகே ஆம்னி பேருந்தில் தீவிபத்து! 3 பெண்கள் உள்பட 11 பேர் காயம்! டிரைவருக்கு பாராட்டு
- Movies
காதலுக்கு வயசெல்லாம் கிடையாது...சின்ன பையனுடன் காதலா என்கிற கேள்விக்கு மாஸ்டர்நாயகியின் க்யூட் பதில்
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் எப்போதும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம்..உங்க ராசி இதுல இருக்கா
- Sports
இதெல்லாம் ஒரு பிட்ச்-ஆ? பிசிசிஐ மீது பாய்ந்த ஹர்திக் பாண்ட்யா.. 2வது டி20 வெற்றி குறித்து அதிருப்தி
- Finance
பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
இலவச போன் எனக்கூறி 3 ஆண்டுகளுக்கு நமக்கு ஜியோ வைக்கும் செலவுகள் என்னென்ன.?
செப்டம்பர் 1, 2016 மற்றும் ஜூலை 21, 2017: இந்த இரண்டு தேதிகளும் இந்திய டெலிகாம் சந்தையை மாற்றியமைத்த தேதிகள் என்று குறிப்பிடலாம். இந்த தேதிகளில் தான் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அதன் இரண்டு பெரிய அறிவிப்புகளை நிகழ்த்தி, அதன் போட்டியாளர்கள் மீது ஒரு பெரும் போரை திறந்துவிட்ட தேதிகளாகும்.
முதலில் "இலவச ஜியோ 4ஜி" நெட்வொர்க் வந்தது. பின்னர் சமீபத்தில் நிறுவனத்தின் பூஜ்ய விலை மதிப்பிலான 4ஜி மொபைல் வெளியானது. அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஜியோபோன் பற்றிய அனைத்து அம்சங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், தொலைபேசி ஏற்கனவே இரண்டு "குழப்பங்களை" உருவாக்கி விட்டுள்ளது. முதலாவதாக, இந்தியாவில் 4ஜி வோல்ட் ஆதரவுடன் மலிவான விலையில் வெளியாகும் கருவி இதுவாகும். இரண்டாவதாக நிறுவனம் இதை "இலவச" விலை குறியீட்டில் வெளியிடுகிறது - அங்குதான் எழுகிறது சந்தேகங்கள்.

பூஜ்ய விலை மொபைல் தானா.?
ஜியோ நிறுவனம், ஜியோபோனை இலவசமாக கிடைக்கும் சாதனம் என்று கூறுகிறது. ஒரு சிறிய கணக்கு போட்டு பார்த்தால் ஜியோபோன் உங்களிடம் இருந்து எந்த அளவிலான பணத்தை பெறும்.? இது நிஜமாகவே பூஜ்ய விலை மதிப்பிலான இலவச மொபைல் தானா.? என்ற கேள்விகளுக்கான பதில் உங்கள் கையிலேயே இருக்கும்.

கவனிக்க வேண்டிய முதல் விடயம்
ரூ.1500/- என்ற செக்யூரிட்டி டெபாஸிட் செலுத்தி ஜியோபோன் ஒன்றை சொந்தமாகும் வாடிக்கையாளர்களுக்கு 36 மாதங்களுக்கு பின்னர் அந்த தொகை வாடிக்கையாளர்களிடம் திருப்பி கொடுக்கப்படுமென்று நிறுவனம் கூறியுள்ள போதிலும் ரூ.153/- ரீசார்ஜ் திட்டத்தை இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

இது ஜியோபோனுக்கு கட்டாயமாகும்
இது நிஜமாகவே பூஜ்ய விலை மொபைல் தான என்பதை விளக்க ரூ.153/- என்ற அடிப்படை திட்டத்தை நாங்கள் எடுத்துக் கொள்கிறோம். இது ஒவ்வொரு ஜியோபோனுக்கும் கட்டாயமாகும் மறுகையில் குறைந்தபட்சம் ரூ153/- ரீசார்ஜ் தொடங்கி ரூ.309/- மற்றும் ரூ.509/- என்ற இறுதி திட்டங்களும் உள்ளன. இதில் ஜியோ கேபிள் டிவி ரீசார்ஜ் நிகழ்த்த ஜியோபோனுக்கான உங்கள் செலவு அதிகமாக இருக்கும். ஆக எளிமையாக ரூ.153/- திட்டத்தை வைத்து போடலாம் வாங்க.!

செலுத்த வேண்டிய தொகை
ஜியோபோன் வாங்க ரூ.1500 + குறைந்த பட்ச முதல் ரீசார்ஜ் ரூ.153 = ரூ.1653/- ஆகிறது. இது ஜியோபோன் வாங்கும் போது மொத்தமாக நீங்கள் செலுத்த வேண்டிய தொகையாகும். ஒவ்வொரு மாதமும் ரூ.153/- என்ற ரீசார்ஜ் வருகின்றது.ஆக ஒரு வருடத்திற்கு நீங்கள் செலுத்த வேண்டிய தொகை ரூ.153 x 12 மாதங்கள் = ரூ.1836/- ஆகும்.

தொகையின் அளவு அதிகரிக்கும்
நீங்கள் ரூ.153 திட்டத்தை தேர்ந்தெடுத்தால், வருடத்திற்கு ஜியோபோனிற்காக நீங்கள் செலவு செய்யும் தொகை இதுவாகும். நீங்கள் அதிக இறுதி திட்டங்களுக்கு சென்றால் அல்லது ஜியோ டிவி கேபிள் போன்ற ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுத்தால் இந்த செலவு தொகையின் அளவு அதிகரிக்கும் என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

மூன்று ஆண்டுகளுக்கு
சரி இப்போது, நீங்கள் மூன்று ஆண்டுகளாக ஜியோபோன் பயன்படுத்துகிறீர்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். இது மிகவும் பாதுகாப்பான கருத்தாகும்.ஆக மூன்று ஆண்டுகளுக்கு நீங்கள் குறைந்த பட்ச ரீசார்ஜ் நிகழ்த்தினால் - ரூ.153 x 36 மாதங்கள் = ரூ 5508/- ஆகும். இப்போது, ஜியோபோன் டெபாஸிட் தொகையுடன் மூன்று ஆண்டுகளுக்கு செலவிட்ட மொத்த தொகையை கூடுங்கள். ரூ.5508 + ரூ.1500 = ரூ.7008/- ஆகும்.

ஆக மொத்த செலவு
ஆக ரூ.7008/- என்பது ஜியோபோன் திட்டத்திற்காக நீங்கள் மூன்று வருடங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையாகும். ஆனால் நீங்கள் டெபாஸிட் பணத்தை திரும்ப பெறுவீர்கள். ஆக மொத்த செலவு ரூ.7008 - டெப்பாஸிட் தொகை ரூ.1500/- கழித்தால் ரூ.5508/- ஆகும். ஆக ஜியோபோனிற்காக 3 ஆண்டுகளுக்கு நீங்கள் செய்யும் குறைந்தப்பட்ச செலவு ரூ.5508/- ஆகும்.

செலவும் உள்ளடக்கம்
ஸ்மார்ட்போன் போன்ற அம்சங்களை கொண்டிருந்தாலும் ஒரு அடிப்படை மொபைலாக தெரியும் ஜியோபோன் ரூ.5508/- என்ற செலவை தருகிறது. எனினும், இந்த விலைக்குள் தரவு, அழைப்புகள் மற்றும் செய்திகள் ஆகியவைகளுக்காக நீங்கள் செய்யும் பொதுவான செலவும் உள்ளடக்கம் என்பதை மறுக்க முடியாது.

கூற விரும்பும் கருத்து
கோட்பாட்டளவில், ஜியோபோன் மற்றும் ரூ.153/- திட்டத்தின் கீழ், நீங்கள் வரம்பற்ற வோல்ட் அழைப்புகளை பெறுவீர்கள், வரம்பற்ற செய்திகள் மற்றும் மாதத்திற்கு 15 ஜிபி தரவும் கிடைக்கும். இருப்பினும், இந்த சலுகையை சந்தையில் கிடைக்கும் மிகசிறந்த சலுகையென்ற முடிவுக்கு வர வேண்டாம். இந்த செலவில் நீங்கள் வேறு மொபைலும் வாங்கலாம், அத்துடன் உங்களின் வழக்கமான ஜியோ 4ஜி சேவையையும் தொடரலாம் என்பதே நாங்கள் வாசகர்களுக்கு கூற விரும்பும் கருத்து.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470