Home
Mobile

ரூ.699 விலையில் 4G ஜியோபோன்! மோடியின் டிஜிட்டல் இந்தியாவிற்குள் அம்பானியின் புதிய என்ட்ரி!

இன்றைய காலகட்டத்தில் உலகளவில், மலிவான இணையச் சேவை என்பது ஒரு முக்கிய அடிப்படை மனித தேவையாக மாறிவிட்டது. மனிதனின் அடிப்படை தேவை மற்றும் அடிப்படை மனித உரிமைகள் போன்று இணையமும் ஒரு முக்கிய பங்காக மாறிவிட்டது என்றே தன கூற வேண்டும்.

பண்டிகை கால சலுகை விற்பனை

பண்டிகை கால சலுகை விற்பனை

ஜியோ நிறுவனம், JIOPHONE DIWALI 2019 OFFER எனப்படும் சிறப்பு ஒரு முறை சலுகை அறிவிப்பை தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த பண்டிகை கால சலுகை விற்பனையின் கீழ், 2G திட்டத்திலிருந்து 4G திட்டத்திற்கு மாற விரும்பும் பயனர்களுக்கு, ஜியோபோன் சாதனத்தை வெறும் ரூ.699 என்ற விலையில் வழங்கவுள்ளது என்று தெரிவித்துள்ளது.

ரூ.699 விலையில் ஜியோபோன்

ரூ.699 விலையில் ஜியோபோன்

இந்த சலுகை ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் என்றும் ஜியோ நிறுவனம் தெளிவாகக் கூறியுள்ளது. இந்த சலுகையின் கீழ் ஜியோபோன் வெறும் ரூ.699 என்ற விலையில் எந்த நிபந்தனைகளும் இல்லாமல் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எக்ஸ்சேஞ் சலுகை மற்றும் கூப்பன் சலுகை போன்று இல்லாமல், நேரடியா ரூ.699 ஜியோபோனை வாங்கிக்கொள்ளலாம்.

கூடுதல் இலவசம்

கூடுதல் இலவசம்

ஜியோபோனின் அசல் விற்பனை விலை ரூ.1,500 ஆகும். தற்பொழுது JIOPHONE DIWALI 2019 OFFER இன் படி வெறும் ரூ.699 என்ற விற்பனை விலையில், இந்த போனை வாங்கி ரூ.800-ஐ எளிதாகச் சேமிக்கலாம். இத்துடன் கூடுதலாக இந்த போனுடன் பயனர்களுக்கு ரூ.700 மதிப்பிலான டேட்டா சேவை இலவசமாக வழங்கப்படுகிறது.

ரூ.1,500 மதிப்பிலான சலுகை

ரூ.1,500 மதிப்பிலான சலுகை

இந்த பண்டிகை கால ஒரு முறை சிறப்பு சலுகையில் வாங்கப்படும் ஒவ்வொரு ஜியோ போனுடனும் ரூ.800 சலுகை மற்றும் ரூ.700க்கான இலவச டேட்டா என மொத்தமாக ரூ.1,500 மதிப்பிலான சலுகையை இலவசமாக வாரி வழங்கியுள்ளது ஜியோ நிறுவனம். மலிவு விலையில் 4G போன்னுடன் டேட்டாவும் இலவசமாக வேண்டும் என்பவர்கள் உடனே இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

டிஜிட்டல் இந்தியாவாக மற்ற அம்பானியின் திட்டம்

டிஜிட்டல் இந்தியாவாக மற்ற அம்பானியின் திட்டம்

நரேந்திர மோடியின், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியர்கள் அனைவரும் டிஜிட்டல் மயமாகவேண்டும் என்பதனால், 2G டேட்டா சேவைக்குள் இருக்கும் பயனர்களின் கரங்களில் 4G சேவை சென்றடைய வேண்டும் என்பதற்காக ஜியோ நிறுவனம் இப்படியான ஒரு முறை சலுகையை மக்களின் நலன் கருதி மட்டும் அறிவித்துள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
JioPHONE Diwali 2019 GIFT – Jiophone at ₹699 only : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X