ஆகஸ்ட் 15: வியக்கவைக்கும் விலையில் வருகிறது ஜியோபோன் 2: மைஜியோ செயலியில் இருந்து வாங்குவது எப்படி?

  ஜியோ நிறுவனம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி ஜியோபோன் 2 மாடலை விற்பனைக்கு கொண்டு வருகிறது, அதன்படி இந்த பீச்சர் போன் மாடல் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்திய மொபைல்
  சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஜியோபோன் 2 மாடல்.

  ஆகஸ்ட் 15: வியக்கவைக்கும் விலையில் வருகிறது ஜியோபோன் 2.!

  மேலும் வாட்ஸ்ஆப், பேஸ்புக் போன்ற குறிப்பிட்ட செயலிகளை இந்த ஜியோபோன் 2 சாதனத்தில் பயன்படுத்த முடியும்,  குறிப்பாக மற்ற பீச்சர் போன்களில் இல்லாத சில முக்கிய அம்சங்கள் ஜியோபோன் 2-வில் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் ஜியோ.காம்-இல் இருந்து எப்படி வங்குவது போன்ற விவரங்களைப் பார்ப்போம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  வழிமுறை-1:

  முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் Jio.com அல்லது மைஜியோ செயலியைப் பயன்படுத்தி இந்த ஜியோபோன் 2 சாதனத்தை வாங்க முடியும்.

  வழிமுறை-2:

  பின்பு Jio.com அல்லது மைஜியோ செயலியில் Get Now விருப்பத்தை பார்ப்பீர்கள், அதை கிளிக் செய்ய வேண்டும்

  வழிமுறை-3:

  அடுத்து வரும் பக்கத்தில் உங்களின் மொபைல் நம்பர், முகவரி போன்ற அனைத்து தகவல்களையும் பதிவிட வேண்டும்.

  வழிமுறை-4:

  பின்பு நெட் பேங்கிங் அல்லது வங்கி கார்டுகளை பயன்படுத்தி ரூ.2,999- பணம் செலுத்த வேண்டும். அதன்பின்பு இந்த சாதனம் வீட்டிற்கு அனுப்பப்படும்.

  டிஸ்பிளே :

  ஜியோ நிறுவனம் சில நாட்களுக்க முன்பு அறிமுகம் செய்த ஜியோபோன் 2 சாதனம் பொதுவாக 2.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

  சேமிப்பு:

  ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

  பேட்டரி:

  இந்த சாதன்தில் 22 இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜியோ போனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  JioPhone 2 will go on sale on August 15: How to buy from MyJio app and Jio com: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more