Home
Mobile

வாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம்.!

ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது

By Prakash S

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது, தொடர்ந்து புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சிறப்பு சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி இப்போது மக்கள் விரும்பும்படி புதிய சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது ஜியோ நிறுவனம்.

வாட்ஸ்ஆப் உடன் மலிவு விலையில் ஜியோபோன் 2 அறிமுகம்.!

ஜியோ நிறுவனம் தற்சமயம் வாட்ஸ்ஆப் செயலி உடன் புதிய ஜியோ போன் மாடலை மலிவு விலையுடன் மும்பையில் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விலை:

விலை:

தற்போது அறிமுகம் செய்த ஜியோபோன் 2 சாதனத்தின் விலை ரூ.2,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த ஜியோ போன் 2-வை ஈஷா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி சேர்ந்து வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கீபோர்டு கூடிய அம்சத்துடன் இந்த சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.

 டிஸ்பிளே :

டிஸ்பிளே :

ஜியோபோன் 2 சாதனம் பொதுவாக 2.4-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு வோல்ட்இ வசதியுடன், வோ-வைபை வசதி, எஃப்.எம்., வைபை, ஜிபிஎஸ், என்.எஃப்சி போன்ற அம்சங்களும் இதில் இடம்பெற்றுள்ளது.

சேமிப்பு:

சேமிப்பு:

ஜியோபோன் 2 பொறுத்தவரை டூயல் கோர் செயலியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த சாதன்தில் 22 இந்திய மொழிகளைப் பயன்படுத்த முடியும் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் பழைய ஜியோ போனில் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற வசதிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15:

ஆகஸ்ட் 15:

ஜியோபோன் 2 சாதனத்தின் விற்பனை வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்திய
சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த புதிய ஜியோபோன்.

Best Mobiles in India

English summary
JioPhone 2 at Rs 2999 Feature phone with Whatsapp Youtube Facebook : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X