Home
Mobile

தீபாவளிக்கு கூட இவ்ளோ குறைக்கலயே.. லேட்டஸ்ட் iPhone மீது ரூ.24000 விலை குறைப்பு.. JioMart நீ கலக்கு சித்தப்பு!

இதுவரை நடந்து முடிந்த எந்தவொரு பண்டிகை கால சிறப்பு விற்பனையிலும், ஆப்பிள் ஐபோன்கள் மீது கிடைத்த எந்த சலுகைகளையும் (Apple iPhone Offers) நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியவில்லை என்றால்.. கவலைப்பட வேண்டாம் ஜியோமார்ட் (JioMart) மிகவும் பிரபலமான ஐபோன் மாடல் ஒன்றின் மீது இலாபகரமான சலுகையை வழங்குகிறது.

ஜியோமார்ட் ஆனது ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் (Apple iPhone 16 Plus) மாடலை மிகவும் மலிவான விலைக்கு விற்பனை செய்கிறது. தற்போது இது அசல் அறிமுக விலையான ரூ.89,900 க்கு பதிலாக, ஜியோமார்ட்டில் ரூ.65,990 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது ரீடெயில் விலையிலிருந்து ரூ.23,910 குறைவான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

JioMart நீ கலக்கு சித்தப்பு.. தீபாவளிக்கு கூட இவ்ளோ குறைக்கலயே!

மேலும் பிரத்யேக வங்கி சலுகை (Exclusive Bank Offer) மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் (Exchange Bonus) சேர்ந்து ஐபோன் 16 பிளஸ் மாடலின் விலையை இன்னும் குறைக்க முடியும். இது கடந்த தசரா மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் கூட கிடைக்காத.. இந்த ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான ஐபோன் சலுகைகளில் ஒன்றாகும்.

எஸ்பிஐ கே-பிராண்டட் பிளாட்டினம் கிரெடிட் கார்டை (SBI Co-branded Platinum Credit Card) பயன்படுத்தி இஎம்ஐ பரிவர்த்தனை செய்தால் கூடுதலாக 5 சதவீத கேஷ்பேக் (ரூ.1,000 வரை) கிடைக்கும். இதன் கீழ் ஐபோன் 16 பிளஸ் மாடலின் விலையை ரூ.64,990 ஆக குறைக்க முடியும். மேலும் - மாடல் மற்றும் நிபந்தனையின் அடிப்படையில், வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போன்களையும் எக்ஸ்சேன்ஜ் செய்து மேலும் விலையை குறைக்கலாம்.

ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) அறிமுகத்திற்கு பின்னர் ஆப்பிள் நிறுவனம் அதன் முழு ஐபோன் 16 சீரிஸ் மீதும் விலை குறைப்பை அறிவித்து இருந்தாலும் கூட அவைகள் - பிளிப்கார்ட், அமேசான் இந்தியா மற்றும் ஜியோமார்ட் ஆகிய தளங்களில் கிடைக்கும் அளவிற்கு லாபகரமானதாக இல்லை.

ஐபோன் 17 சீரிஸின் விலை விவரங்கள்:
- ஐபோன் 17 மாடலின் (256ஜிபி) ஆரம்ப விலை - ரூ.82,900
- ஐபோன் ஏர் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - ரூ.1,19,900
- ஐபோன் 17 ப்ரோ மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - ரூ.1,34,900
- ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் மாடலின் (256 ஜிபி) ஆரம்ப விலை - ரூ.1,49,900

ஐபோன் 16 பிளஸ் முக்கிய அம்சங்கள்:
- 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே
- ஆப்பிளின் ஏ18 சிப்
- டூயல் ரியர் கேமரா செட்டப்
- OIS உடன் 48 மெகாபிக்சல் மெயின் ஃப்யூஷன் கேமரா
- 2x ஆப்டிகல்-தரமான டெலிஃபோட்டோ ஜூம் மற்றும் மேக்ரோ உடனான 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா
- 27 மணிநேர வீடியோ பிளேபேக்
- ஐபி68 ரேட்டிங்

ஐபோன் 17 முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளே
- ஆப்பிளின் ஏ19 சிப்செட்
- டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவு
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமரா
- ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி லைஃப்

More from GizBot

Best Mobiles in India

English summary
JioMart Giving One of the most Best iPhone 16 Plus offer of the year
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X