முகேஷ் அம்பானி அதிரடி.. UPI.. 128ஜிபி மெமரி.. மலிவு விலையில் இரண்டு 4G போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இந்தியா மொபைல் காங்கிரஸ் 2024 (India Mobile Congress 2024)-இல் ஜியோபாரத் வி3 (JioBharat V3) மற்றும் ஜியோபாரத் வி4 (JioBharat V4) ஆகிய இரண்டு போன்களை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த போன்கள் மலிவு விலையில் மேம்பட்ட பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளன. இப்போது ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 அம்சங்கள் (jiobharat v3 v4 specifications): இந்த புதிய பீச்சர் போன்கள் 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே வாய்ஸ்கால் அழைப்புகளுக்கு இந்த போன்கள் மிகவும் அருமையாகப் பயன்படும். மேலும் இந்த ஜியோ போன்களில் யுபிஐ (UPI) அடிப்படையிலான டிஜிட்டல் பேமெண்ட்கள் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ பே (JioPay) போன்ற நிறுவனத்தின் ஆப்ஸ்களை இந்த ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்களில் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீடியோ ஸ்ட்ரீமிங் போன்ற அம்சங்களுடன் இந்த போன்கள் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்கள் டிஎப்டி (TFT) டிஸ்பிளே உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் டி9 (T9) கீபோர்டுகளைக் கொண்டுள்ளன இந்த இரண்டு போன்கள். அதேபோல் 23 இந்திய மொழிகளை ஆதரிக்கின்றன இந்த அட்டகாசமான ஜியோ போன்கள். மேலும் இந்த போன்களின் வடிவமைப்பு அருமையாக இருக்கிறது.
ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய பீச்சர் போன்களில் 1000mAh பேட்டரி வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த போன்கள் நாள் முழுவதும் தடையில்லா சேவையை உறுதி செய்கிறது. அதாவது இந்த போன்கள் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் 128ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டுகளை பயன்படுத்த எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.
இந்த ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்களில் பின்பக்க கேமராக்கள் உள்ளன, அவை புகைப்படங்களைக் கிளிக் செய்ய உதவுகின்றன, ஆனால் இதைவிட அவை ஆன்லைன் கட்டணங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், அதாவது பயனர்கள் QR குறியீடுகளை ஸ்கேன் செய்து பணம் அனுப்ப வசதியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்களின் விலை ரூ.1099 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் ஜியோமார்ட் (JioMart) மற்றும் அமேசான் (Amazon) தளங்களில் வாங்க முடியும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த போன்கள் மலிவு விலையில் வாங்க கிடைப்பதால் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2023-ல் வெளியான ஜியோபாரத் வி2 போனுக்கு நல்ல வரவேற்பு இருந்ததது. அந்த போனுக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜியோபாரத் வி3 மற்றும் ஜியோபாரத் வி4 போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜியோ நிறுவனம் விரைவில் பல அசத்தலான சாதனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








