Home
Mobile

மீண்டும் பழைய மாதிரி.. சத்தமில்லாமல் அம்பானி.. வெறும் ரூ.1799-க்கு 4G போன் மட்டுமில்ல.. சலுகையை கொட்டிட்டாங்க!

சத்தமில்லாமல் முடிச்சிட்டாருயா முகேஷ் அம்பானி என்று சொல்லும் விதமாக ஜியோ கட்டண உயர்வை பற்றிய பேசிக்கொண்டிருந்த கஸ்டமர்களை ஜியோபாரத் ஜே1 4ஜி (JioBharat J1 4G) போனை பற்றி பேச வைக்கும்படியான சம்பவம் நடந்திருக்கிறது. வெறும் ரூ.1799-க்கு 4G போன் மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல் மற்றும் கிரிக்கெட், யுபிஐ சேவை போன்ற ஒட்டுமொத்த பீச்சர்களுடன் இந்த போன் களமிறங்கி இருக்கிறது. அதேபோல ரூ.123 முதல் ப்ரீபெய்ட் திட்டங்கள் கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோபாரத் ஜே1 4ஜி அம்சங்கள் (JioBharat J1 4G Specifications): இந்த ஜியோபாரத் போனில் 2.8 இன்ச் டிஸ்பிளே வருகிறது. 0.13 ஜிபி மெமரி வருகிறது. திரெட்எக்ஸ் ஆர்டிஓஎஸ் (Threadx RTOS) வருகிறது. 128 ஜிபி மெமரி கார்டு சப்போர்ட் உள்ளது. சிங்கிள் நானோ சிம் சிலாட் (Single Nano SIM Slot) வருகிறது.

மீண்டும் பழைய மாதிரி.. சத்தமில்லாமல் அம்பானி.. ரூ.1799-க்கு 4G போன்!

3.5 மிமீ ஆடியோ ஜாக் (Audio Jack) வருகிறது. 2500mAh பேட்டரி வருகிறது. டிஜிட்டல் ரியர் கேமரா (Digital Rear Camera) வருகிறது. ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோசாவன் (JioSaavn), ஜியோபே (JioPay), ஜியோசாட் (JioChat) மற்றும் ஜியோபோட்டோஸ் (JioPhotos) ஆப்கள் சப்போர்ட் உள்ளது.

ஆகவே, லைவ் டிவி ஷோக்கள், செய்திகள், மூவிஸ், ஸ்போர்ட்ஸ் போன்ற அனைத்து வீடியோ கன்டென்ட்களையும் பார்த்து கொள்ளலாம். ஜியோபே ஆப் மூலம் யுபிஐ பேமெண்ட் செய்து கொள்ளலாம். இதில் ஸ்கேன் கியூஆர் கோட் (Scan QR Code), சவுண்ட் அலர்ட் (Sound Alert) பீச்சர்களும் வருகிறது.

இந்த ஜியோபாரத் ஜே1 4ஜி போனுக்கு 4ஜி பேண்ட் கனெக்டிவிட்டி வருகிறது. ஆகவே, எச்டி காலிங் மற்றும் ஹை-ஸ்பீடு இன்டர்நெட் கிடைக்கும். யூடியூப் போன்ற இதர ஆப்களின் சப்போர்ட் வருகிறது. ஜியோசாட் ஆப் மூலம் வாய்ஸ் மெசேஜ், குரூப் சாட் மற்றும் போட்டோ, வீடியோ ஷேரிங் செய்து கொள்ளலாம்.

மீண்டும் பழைய மாதிரி.. சத்தமில்லாமல் அம்பானி.. ரூ.1799-க்கு 4G போன்!

இதுவொரு ஜியோ லாக்டு (Jio Locked) மாடலாகும். ஆகவே, ஜியோ சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். ‎டார்க் கிரே (Dark Grey) கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த ஜியோபாரத் ஜே1 4ஜி போனின் விலை ரூ.1799ஆக இருக்கிறது.

இந்த ஜியோபாரத் போனுக்காக பிரத்யேகமாக ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கின்றன. மாதத்துக்கு ரூ.123 செலவில் அன்லிமிடெட் வாய்ஸ் மற்றும் 14 ஜிபி டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த போனுக்கு கொடுக்கப்படும் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்களையும் இப்போது பார்த்துவிடலாம்.

ரூ.123, ரூ.234 மற்றும் ரூ.1234 மதிப்பில் திட்டங்கள் இருக்கின்றன. இந்த திட்டங்கள் தவிர வேறு கிடையாது. ரூ.123 ப்ரீபெய்ட் திட்டத்தை பொறுத்த வரையில், 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கிறது. 14 ஜிபி டேட்டா மற்றும் 300 எஸ்எம்எஸ் சலுகையை வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

ரூ.234 ப்ரீபெய்ட் திட்டத்தில் 56 நாட்களுக்கு வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். இந்த நாட்களில் அன்லிமிடெட் கால்கள், 600 எஸ்எம்எஸ்கள், 28 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இறுதியாக ரூ.1234 ப்ரீபெய்ட் திட்டத்தில் 336 நாட்கள் வேலிடிட்டி, 168 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 28 நாட்கள் வீதம் 300 எஸ்எம்எஸ் சலுகை கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioBharat J1 4G With 2500mAh Battery Sale Under Rs 2000 in Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X