Home
Mobile

ஜியோ 10வது ஆண்டு சலுகை.. வெறும் ரூ.299-க்கு 4ஜி போன்.. என்னென்ன பலன்கள்? எப்படி வாங்குவது?

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தி 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஜியோபாரத் 4ஜி போன்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. அதுவும் பண்டிகை காலத்தில் மக்கள் 2ஜியில் இருந்து 4ஜிக்கு மாற வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

இந்த சிறப்பு சலுகையின் கீழ் தகுதியுள்ள ஜியோபாரத் 4ஜி போனை ரூ.1499க்கு வாங்கலாம். இதனுடன் 6 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் ஒவ்வொரு மாதமும் 14GB டேட்டா மற்றும் வரம்பற்ற HD குரல் அழைப்புகள் வழங்கப்படுகின்றன.

ஜியோ 10வது ஆண்டு சலுகை.. வெறும் ரூ.299-க்கு 4ஜி போன்..

தற்போது 2ஜி போனை வைத்திருக்கும் பயனர்கள் மாதத்திற்கு 199 ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலைமை உள்ளது. எனவே ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ்களுக்காக மட்டுமே கிட்டத்தட்ட ரூ. 1,200 செலுத்த வேண்டும். ஆனால் ஜியோ நிறுவனம் தற்போது ரூ.1499 விலையில் போன் உடன் ஆறு மாதங்களுக்கு ரீசார்ஜ் சலுகையைக் கொடுக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோபாரத் 4ஜி போனுக்கு செலுத்த வேண்டிய உண்மையான விலை ரூ.299-ஆக இருக்கும் என்று ஜியோ நிறுவனம் கூறுகிறது.

ஜியோபாரத் 4ஜி போன்களின் அம்சங்கள்
ஜியோ அறிவித்துள்ள ஆஃபர் ஜியோபாரத் பி1 மற்றும் ஜியோபாரத் பி2 ஆகிய இரண்டு போன்களுக்கு பொருந்துகின்றன. இந்த போன்கள் 2000எம்ஏஎச் பேட்டரி, 2.3 இன்ச் டிஸ்பிளே, கீபேட், 4ஜி கனெக்டிவிட்டி போன்ற ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போன்களின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

இந்த ஜியோபாரத் போன்கள் முழுமையான டிஜிட்டல் சேவைகளை வழங்குகிறது. அதாவது ஜியோபே, ஜியோடிவி, ஜியோசாவ்ன், ஜியோஹாட்ஸ்டார் போன்ற சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளன இந்த ஜியோ போன்கள்.

குறிப்பாக ஜியோடிவி (JioTV) மூலம் 500-க்கும் மேற்பட் லைவ் டிவி சேனல்கள், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மூலம் நேரலைக் கிரிக்கெட் மற்றும் திரைப்படங்கள், ஜியோசாவ்ன் மூலம் கோடிக்கணக்கான பாடல்களைக் கேட்கும் வசதி கிடைக்கும்.

அதேபோல் இந்த ஜியோபாரத் போன்களில் ஜியோபே (JioPay) மூலம் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனைகள் செய்யும் வசதி மற்றும் சவுண்ட் பாக்ஸ் (Sound Box) அம்சம் உள்ளன. குடும்பத்தினரின் இருப்பிடத்தைக் கண்டறியும் வசதி (location-monitoring tools) மற்றும் பாதுகாப்பான அழைப்புகளுக்கான ஜியோ சேஃப்டி ஷீல்ட் ஆகியவை இதில் உள்ளன.

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே சலுகை
ஜியோ அறிவித்துள்ள இந்தச் சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைப்பதால், தற்போது 2ஜி போன் பயன்படுத்தி வருபவர்கள் அதன் தகுதி மற்றும் விதிமுறைகளை முன்கூட்டியே அறிந்துகொள்வது முக்கியம். குறிப்பாக, ஆறு மாத இலவச ரீசார்ஜ் பலன்கள் வழங்கப்படும் விதம், தங்களுக்குப் பொருந்தக்கூடிய சலுகைகள் உள்ளிட்ட விவரங்களை போன் வாங்குவதற்கு முன் சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.

ஜியோ 10வது ஆண்டு சலுகை.. வெறும் ரூ.299-க்கு 4ஜி போன்..

ஜியோவின் 10ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட இந்தச் சலுகை, குறைந்த செலவில் 4ஜி போனுக்கு மாற விரும்பும் பயனர்களை மையமாகக் கொண்டுள்ளது. ரூ.1,499 மதிப்பிலான போனுடன் ஆறு மாத இலவச ரீசார்ஜ் பலன்களும் சேர்த்து வழங்கப்படுவது இந்தச் சலுகையின் குறிப்பிடத்தக்க அம்சமாக உள்ளது.

ஜியோபாரத் 4ஜி போன்கள் எங்கு கிடைக்கும்?
ஜியோமார்ட், ரிலையன்ஸ் டிஜிட்டல், ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் முன்னணி இ-காமர்ஸ் தளங்களில் ஜியோபாரத் 4ஜி போன்களை வாங்க முடியும். அனைத்து சிறப்பான அம்சங்களுடன் ஜியோபாரத் 4ஜி போன்கள் சலுகை விலையில் கிடைப்பதால் நம்பி வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
JioBharat 4G Phone Now Available for Rs 299: Check Offer Terms and Conditions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X