Home
Mobile

அதுதான் அம்பானி.. மாதம் ரூ.499 கட்டணம்.. 2 திட்டம் மட்டும்.. வேற இல்ல.. நெட்பிளிக்ஸ் சந்தா!

டெலிகாம் மார்கெட்டில் யாரும் கொடுக்க முடியாதபடி மாதத்துக்கு ரூ.499 செலவில் நெட்பிளிக்ஸ் சந்தா மட்டுமல்லாமல், 3 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 5ஜி சேவை போன்ற சலுகைகளை ஜியோ (Jio) நிறுவனம் வழங்குகிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஜியோ ரூ 1099 திட்ட விவரங்கள் (Jio Rs 1099 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் ஓடிடி (OTT) சலுகை மட்டுமல்லாமல், தினசரி டேட்டா (Daily Data), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கிடைக்கிறது.

மாதம் ரூ.499 கட்டணம்.. 2 திட்டம் மட்டும்.. வேற இல்ல.. Netflix சந்தா!

இந்த திட்டத்தை பெறும் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல், 2 ஜிபிக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா சலுகையை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கிடைக்கிறது.

ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் மட்டும் இந்த 5ஜி சேவையை இலவசமாக பயன்படுத்தலாம். இதுபோக நாள்தோறும் 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்களை (Roaming Voice Calls) வாடிக்கையாளரகள் செய்து கொள்ளலாம்.

மேலும், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களை வேலிடிட்டி நாட்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக 84 நாட்களுக்கான நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

இந்த திட்டத்தின் மாதாந்திர செலவானது, ரூ.366 ஆக இருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஓடிடி, டேட்டா, 5ஜி போன்ற பல்வேறு சலுகைகள் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் வரும் டேட்டாவை கூட கூடுதல் டேட்டா வேண்டுமானால், ஜியோ ரூ 1499 திட்டத்தை ஜியோ வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

ஜியோ ரூ 1499 திட்ட விவரங்கள் (Jio Rs 1499 Plan Details): இந்த திட்டத்திலும் ஓடிடி சலுகை மட்டுமல்லாமல், டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி மற்றும் ஜியோ ஆப்ஸ் (Jio Apps) சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. முந்தைய திட்டத்தை போலல்லாமல், தினசரி 3 ஜிபி டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

ஆகவே, ஜியோ வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 252 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இதன் மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, 3 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஜியோ அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை இந்த திட்டத்திலும் பயன்படுத்தலாம்.

அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆப்களின் சலுகையும் கொடுக்கப்படுகிறது. நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தாவை பயன்படுத்தலாம்.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கான மாதாந்திர செலவானது, ரூ.499 ஆக இருக்கிறது. ஜியோவில் நெட்பிளிக்ஸ் சந்தா கொண்ட 2 திட்டங்கள் இவை மட்டுமேயாகும். ஆகவே, வேலிடிட்டிக்கு முதல் திட்டத்தையும், வேலிடிட்டியோடு டேட்டா சலுகைக்கு 2ஆவது திட்டத்தையும் ஆப்ஷனில் எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1499 Plan Offers 3GB Data, Unlimited Voice Calls, 84 Days Validity Netflix Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X